இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| இது தாய் பிறந்த தேசம் |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| அறிவுமதி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 03 ஆகஸ்ட் 2010 00:00 |
|
படம் : சிறைச்சாலை
![]() இது தாய் பிறந்த தேசம் நம் தந்தை ஆண்ட தேசம் இது நாம் வணங்கும் தேசம் உயிர் நாடி இந்த தேசம் மண் பெரிதா உயிர் பெரிதா பதில் தரவா இப்போதே வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம் வீரத்தை குண்டுகள் துளைக்காது வீரனை சரித்திரம் புதைக்காது நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இழந்த உயிர்களோ கணக்கில்லை இருமி சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று நிலத்தடியில் புதைந்திருக்கும் பினங்களுக்கும் மனம் இருக்கும் தாயோ பத்து மாசம் தான் அதிகம் சுமந்தது தேசம் தான் உயிருன் உடலும் யார் தந்தார் உணர்ந்து பார்த்தால் தேசம் தான் இந்த புழுதிதான் உடலாச்சு இந்த காற்று தான் உயி மூச்சு இன்று இரண்டுமே பரிப்போச்சு இன்னும் என்னடா வெரும் பேச்சு கை விலங்கை உடைத்திடடா எரிமலையே எழுந்திடடா - அறிவுமதி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
இன்று இரண்டுமே பரிப்போச்சு --> .... பறிபோச்சு ....
இன்னும் என்னடா வெரும் பேச்சு --> .... வெறும் பேச்சு ....
RSS feed for comments to this post.