இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே... |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| தாமரை ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 00:00 |
![]() ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே... உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே... என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே... (அடியே கொல்லுதே...) (இசை...) ஆண்: இரவும் பகலும் உன்முகம் இரையைப் போலே துரத்துவதும் ஏனோ முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்றதே உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளதே என் மீது பாய்ந்ததே மழைக்காலத்தில் சரியும் மண் சரிவைப் போலவே மனமும் உனைக் கண்டதும் சரியக் கண்டேனே... (அடியே கொல்லுதே...) (இசை...) ஆண்: அழகின் சிகரம் நீயடி கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி இந்தக் கணமே உன்னை மணப்பேனே பெண்: சொன்னால் வார்த்தை என் சுகமே மயில் தோகை போலவே என் மீது ஊருதே எல்லா பாதமும் மீண்டும் சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே எனக்காகவே வந்தாய் என் நிழல் போலவே நின்றாய் உனைத் தோற்று நீ என்னை வென்றாயே... ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே... உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே... பெண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே... என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே... - தாமரை |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


