| ராத்திரியில் பூத்திருக்கும் |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2010 00:00 |
|
படம்: தங்கமகன்
![]() ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில் பகலும் உறங்கிடும் வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும் கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும் கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம் மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம் - கவிஞர் வாலி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


