| பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| பழனி பாரதி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 06 ஜூலை 2010 00:00 |
|
படம்: அழகி
![]() பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டுக்கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டைக் குழந்தையடி ஈ ஈ ஈ ஈ சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக்கொண்டு மெட்டொன்று தந்ததடி ஈ ஈ ஈ ஈ இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன் தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன் வானவில்லின் வரவுதன்னை யார் அறிவார்? வாழ்க்கை செல்லும் பாதை தன்னை யாருரைப்பார்? இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு இன்னும் இருப்பது எதற்கு? ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா, செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா, இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்துக் கொண்டேன், வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன். அன்று சென்ற இளம் பருவம் அது எண்ண எண்ண மனம் நிறையும், அன்று இழந்தது மீண்டும் , எந்தன் கையில் கிடைத்தது வரமே, அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை - பழனி பாரதி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


