• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



திரையில் மலர்ந்த கவிதைகள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 00:00

படம்: மன்னன்

 


பாடல்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

 

-கவிஞர் வாலி

Tags:
  • கவிஞர் வாலி
Add new comment
 
கம்பன் ஏமாந்தான் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 00:00

படம் : நிழல் நிஜமாகிறது

 

 

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான்

 

-கண்ணதாசன்

Tags:
  • கண்ணதாசன்
Add new comment
 
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 01 மே 2012 00:00

படம் : சிம்லா ஸ்பெஷல்

 

http://www.shotpix.com/images/75378667222379150562.jpg

 

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

 

-வாலி

Tags:
  • வாலி
Add new comment
 
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012 00:00

படம்: வைதேகி காத்திருந்தாள்

 

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமாவ்..
கண் திறந்தாள் சுகம் வருமோ..

 

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைதொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கைதொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்..
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச.. மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..

 

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ..
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ..
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
அங்கத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழ்ந்தா நெஞ்சத்தில்

 

-வாலி

Tags:
  • வாலி
Add new comment
 
ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
மு.மேத்தா ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012 00:00

படம்: நந்தலாலா

 

http://1.bp.blogspot.com/_Eeg1ZgkkAXA/TPEnvtrZotI/AAAAAAAAAXw/HD3rz5eB0Rs/s1600/nandalala.jpg

 

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?

உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால்தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னை இன்றி யார் வந்தது?
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

 

-மு.மேத்தா

 

Tags:
  • மு.மேத்தா
Add new comment
 
பொன் ஒன்று கண்டேன் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 00:00

படம்: படித்தால் மட்டும் போதுமா


 

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்… கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் விழியில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீயின்றி நான் இல்லை
நானின்றி நீ இல்லையே
சென்றேன்… கண்டேன்… வந்தேன்
பூ ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா

 

- கண்ணதாசன்

Tags:
  • கண்ணதாசன்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • சாதி மல்லிப் பூச்சரமே
  • பொன் மாலைப் பொழுது
  • மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
  • உன்னிடம் மயங்குகிறேன்
  • பிறை தேடும் இரவிலே உயிரே
  • கள்வரே கள்வரே
  • அம்மா உன் பிள்ளை நான்
  • கனாக் காணும் கண்கள் மெல்ல
  • வெண்பனியே முன்பனியே
  • யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 23

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.