• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



பழந்தமிழ் கவிதைகள்
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012 00:00

பாலை - தோழி கூற்று

 

 

உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.


-பாலைபாடிய பெருங்கடுங்கோ

Tags:
  • பாலைபாடிய பெருங்கடுங்கோ
Add new comment
 
இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஐயூர் முடவனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012 00:00

நெய்தல் - தோழி கூற்று

 

 

இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.

 

-ஐயூர் முடவனார்

Tags:
  • ஐயூர் முடவனார்
Add new comment
 
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஓரம் போகியார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 06 மே 2012 00:00

நெய்தல் - தலைவி கூற்று

 


பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.


-ஓரம் போகியார்

 

Tags:
  • ஓரம் போகியார்
Add new comment
 
மெய்யே வாழி தோழி சாரல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கபிலர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012 00:00

குறிஞ்சி - தலைவி கூற்று

 

 

மெய்யே வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனஎன் தடமென் தோளே.


-கபிலர்

Tags:
  • கபிலர்
Add new comment
 
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பரணர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2012 00:00

 

குறிஞ்சி - தலைவன் கூற்று

 

 

இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே.


-பரணர்

Tags:
  • பரணர்
Add new comment
 
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
சத்திநாதனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012 00:00

குறிஞ்சி - தலைவன் கூற்று

 

 

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.

 

-சத்திநாதனார்

Tags:
  • சத்திநாதனார்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
  • மாரி ஆம்ப லன்ன கொக்கின்
  • யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்
  • பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
  • நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 22

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.