• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



யான் வழிபடும் தெய்வம் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
கவிமாமணி மீ.விசுவநாதன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2010 00:00
யான் வழிபடும் தெய்வம்
விதையே இல்லா விண்வெளி மூலத்தைக்
கதையா சொல்லிக் கணக்கிட முடியும் ?

எல்லாத் திசையும் இன்பம் கண்டவன்
சொல்லையா தேடுவான் சுகத்தை விளக்க ?

கல்லுள் தேரை கசியும் மூச்சில்
நல்லதோர் கவிதை நயத்தை ரசித்தோன்;

சொட்டுத் தேனைச் சுவைக்கும் போதே
கொட்டும் தேளின் கொடுமை மறந்தோன்;

கட்டுக் கூந்தலார்க் கன்னியின் காதல்
பட்டும்,,யோகப் பயிற்சியைப் பெற்றோன்;

பிச்சை கேட்கும் பிழைப்பை உணர்ந்தே
பச்சை வயலின் பார்வை அறிந்தோன்;

விரிந்த வானில் திரிந்த போதே
தெரிந்த மேடு பள்ளம் தெளிந்தோன்;

வாழ்வில் மயங்கும் வசதியைப் பெற்றும்
தாழ்வில் உழலும் வறுமையைப் புரிந்தோன்;

அச்சம்,அடிமை, ஆணவச் சிறுமை
துச்சம் என்றே துன்பம் கடந்தோன்;

பறவை, பூச்சி, பருவக் குழந்தை,
நிறமெலாம் ஒன்றெனத் தியானம் செய்வோன்;

அடுப்பில் தெரியும் அனலைக் கொஞ்சம்
சொடுக்கிப் பார்த்துச் சொந்தம் சேர்த்தோன்;

பக்குவ மனத்தைப் பரிச்சயம் கொண்டோன்
எக்குல மாயினும் என் குல தெய்வமே!
- கவிமாமணி மீ.விசுவநாதன்
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.