| ஓடி விளையாடு |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| கலைமகன் பைரூஸ் ஆல் எழுதப்பட்டது |
| திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு! தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு! கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்! கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு! உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு! யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்! வானும்வசமாகும் வின்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ! சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்! சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்? நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ நிலையிலா வாழ்வின் முடிவேதென யறியாதுநீ! ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்! இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு! இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை! இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை! வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின் வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே! - கலைமகன் பைரூஸ் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


