• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்

பகிர்ந்து கொள்ள



Tweet


முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
மன்னார் அமுதன் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 00:00

 

காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்

 

-மன்னார் அமுதன்

Add new comment
 
நீ வரும் நாள் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
காயத்ரி தேவி ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012 00:00

 

என் கண்களிலிருந்து விடை பெற்று ....
என் கனவுகளுக்குள் குடியேறினாய்....
கையசைத்து செல்கிறாய்...
கடைக்கோடியில் ஓர்  புள்ளியாய் மறைந்து போகிறாய்...
உன் காலடி சுவடுகள் மறைந்து போக....
தொலைவில் உன்னை காணாமல் பரிதவிக்கிறேன்..
தொடரும் பொறுப்புகள் எனை அழைக்க....
மீண்டும் நுழைகிறேன் வீட்டுக்குள்...
ஒவ்வொரு இடமும் உன்னை நினைவு படுத்த...
என் கண்களிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்...
எனினும்...
மனம் மட்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது ......
உனைத்தொடர்ந்து...
என்றோ ஒரு நாள் நீ வருவாயென...

 

-காயத்ரி தேவி

Add new comment
 
எட்டாக்கனி.... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
பாரதி பிரியா ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012 00:00

 

நெடுநாளைய என் நினைவலைகளில்
நீந்திக்கொண்டிருக்கிறாய்...
காத்திருப்புகளில் கரைந்து போவது
கனவுகளும்  காலமும்தான்...!

கனவலையில் காத்திருக்கிறேன்..
கை பிடிக்கும் தூரத்தில்....
நீயிருந்தும் ..... காலம் மட்டும்
கைகொடுக்காமல் போகிறது...!

பூவிழிப்பார்வைகள் போதும்....
இருவிழி வலிகள் போகும்...
பூவிதழ் வார்த்தைகள் போதும்.....
இதயம் சாகாமல் வாழும்...!

வரும்காலம் வசந்தமாகலாம்...
நிகழ்காலம் பாலையானாலும்...
பூமியில் இனியொரு ஜென்மம்...
நீயும் நானும் நிஜமாய் வாழ.....

 

-பாரதி பிரியா

Add new comment
 
கருவில் முள்ளாய் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
காயத்ரி பாலாஜி ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 28 ஜனவரி 2012 00:00

 

 

கண் விழித்து பார்க்கையில்....
கத கதப்பாய் இருந்தது என் உலகம்...
காற்றும் நீரும் நிறைந்த...
கருப்பையில் ஓர்  உருவாய் நான்...

என் வயிற்று பசி போக்க..
தொப்புள் கொடி வழியே உணவு தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை பட்டினி போடுவாய் என....

எனக்கு சுவாசம் தந்த
உன் பாசம்....
வெறும் வேஷம் என்றறியேன்...

அம்மா....
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாரென்று எண்ணி....
அழுகின்றேன்....
ஆயுசு முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்....
என்றறியாமல்.....

உன்னிலிருந்து பிறந்த என்னை....
பஞ்சு மெத்தையில்.....
படுக்க வைப்பாய் என்றெண்ணினேன்....

பாழும் கிணற்றிலோ...
பிளாட்பாரத்திலோ.......
குப்பை தொட்டியிலோ....
எனை வீசிவிட்டு செல்வாய்....
என அறியாமல்.....

பிறந்த நாள் அறியாமல்...
பெற்றோர் பெயர் தெரியாமல்...
யாரோ வைத்த பெயர் சூடி....
வளர்கின்றேன்......
என் எதிர்காலம் புரியாமல்....

அம்மாவின் முகமறியேன்....
எனை அரவணைத்த......
முகங்கள் என் அன்னையாய்.....
என் வளர்ச்சிக்கு......
பங்களித்தோர்....
என் தந்தையாய்.....
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் சகோதரர்களாய்....
வாழ்கின்றோம் ஓர் கூட்டில்....
அனாதை இல்லம் எனும் வீட்டில்....

பிறந்த குலத்தின்
பெயர் அறியோம்...ஆதலால் ..
அனாதை என்னும் அடைமொழி சூட்டி விட்டார்.....

அம்மா அன்று  உன்....
கருவினுள் நான் பூவாய்.....
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
விருப்பின்றி....
எனை விதைத்தாய்.....
அம்மா....உன் பெயர்......
என் மனதில் முள்ளாய்....!

 

-காயத்ரி பாலாஜி

Comments (4)
 
தேவனின் திருக்கரம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ப.மதியழகன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 00:00

 

 

அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்
விறகுவெட்ட வந்தவனின் கால்கள்
புதைகுழியில் சிக்கியது
கொஞ்சம் கொஞ்சமாக
மண்குழம்பு அவன் உடலை
விழுங்கிக் கொண்டிருந்தது
எத்தனையோ கோடி மனிதர்களை
உண்டு செரித்த வயிறல்லவோ
அதற்கு!
அவனது வாய் இறைவனின்
நாமங்களை உச்சரித்து அழைத்தது
அவனது கண்களும் மண்ணுக்குள்
புதைந்தன
மேலே நீட்டிக் கொண்டிருந்த
அவனது கைகளை
ஒரு உருவம் பற்றியது
சேற்றிலிருந்து மேலே வந்த அவன்
கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்
வேதத்தையும், சடங்குகளையும்
மறுத்துப் பேசியதால்
தன்னுடைய கிராமத்தினரால்
கல்வீசித் துரத்தப்பட்ட
புத்தரல்லவோ இவர்
எனது கையினால் வீசப்பட்ட கற்களால்
காயமடைந்த கரங்களா
என் உயிரைக் காப்பாற்றியது
என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான்
உயிரற்ற ஓலைச் சுவடிகளில்
இறைவனைத் தேடினோம்
உயிர்களின் மேல் காட்டும் கருணையே
கடவுளெனப் போதித்த
கண்ணெதிரே நிற்கும்
ஜீவனுள்ள மனிதனை மறந்து!

 

-ப.மதியழகன்

Tags:
  • ப.மதியழகன்
Add new comment
 
மாறாத ஓர் உணர்வு! அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
ராமலக்ஷ்மி ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 25 ஜனவரி 2012 00:00

 

ஊழலற்ற அரசின் ஆட்சி
எகிறாத விலைவாசி
சாமான்ய இந்தியனின்
நிறைவேறாக் கனவுகள்

நம்பிக்கையுடன் நகர்வது
பழகிப்போன ஒன்றாகி..

எப்போதும் போலவே
குடியரசு தினக் கொண்டாட்டங்களை
கொடியேற்றம் அணிவகுப்பு
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை

எதிர்பார்த்து..
நாளைய தினம்!

எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை இருப்பினும்

நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத ஓர் உணர்வாய்..!

வாழ்க பாரதம்!

குடியரசு தின வாழ்த்துக்கள்!

 

-ராமலக்ஷ்மி

 

 

Tags:
  • ராமலக்ஷ்மி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • இலக்கு
  • உலகம் அழியும் நாள்....
  • பித்தனானேன்
  • மெளன ரகசியம்....!
  • நீயில்லாமல்...!
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 98

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.