• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்

பகிர்ந்து கொள்ள



Tweet


முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

அப்துல் ரகுமான் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 6
குறைந்தஅதி சிறந்த 
கவிஞர்கள் - கவிஞர் பக்கம்
இணைய மேலாளர் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 20:39
அப்துல் ரகுமான்
கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் அப்துல் ரகுமான், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத்  துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

கவிதைத் தொகுப்புகள்

* பால்வீதி
* நேயர் விருப்பம்.
* பித்தன்
* ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
* சுட்டுவிரல்

கட்டுரைத் தொகுப்புகள்

* நெருப்பை அணைக்கும் நெருப்பு
* இல்லையிலும் இருக்கிறான்
* இது சிறகுகளின் நேரம்
* முட்டைவாசிகள்.
* ஆறாவதுவிரல்


( நன்றி : விக்கிபீடியா )
 

Comments  

 
0 #2 2011-07-28 20:05
அறியத்தந்தமைக்க ு நன்றி .
Quote
 
 
0 #1 2011-03-11 08:21
kavithaigal superb.........
Quote
 
Refresh comments list
RSS feed for comments to this post.

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.