• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
ராத்திரியில் பூத்திருக்கும் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2010 00:00
படம்: தங்கமகன்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்
பகலும் உறங்கிடும்


வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்



மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்

- கவிஞர் வாலி
Add new comment
 
உசிரே போகுது உசிரே போகுது அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2010 00:00
படம்: ராவணன்
உசிரே போகுது உசிரே போகுது
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதச்ச
அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்க்கிறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில நீ இருந்தும்
அய்விரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழம் என்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு உசிர் தடங்கெட்டு திரியுதடி
தைலாங் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முத கிருக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
எம் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரரும் சூரியரும் சுத்தி
ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப
தல சுத்தி கிடக்குதே

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி பழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்தம் பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு
பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் ஒன்னுக்குள்
ஒன்னெடுத்து மனசுக்குள்ளே

- வைரமுத்து
Add new comment
 
பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பழனி பாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 06 ஜூலை 2010 00:00
படம்: அழகி
பாட்டுச் சொல்லி

பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி
குங்குமம் வந்ததம்மா
கேட்டுக்கொள்ள
கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும்
ஒட்டி வந்த ரெட்டைக் குழந்தையடி ஈ ஈ ஈ ஈ
சந்தனத்து சிந்து ஒன்று
கட்டிக்கொண்டு மெட்டொன்று தந்ததடி ஈ ஈ ஈ ஈ

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதன்னை யார் அறிவார்?
வாழ்க்கை செல்லும் பாதை தன்னை யாருரைப்பார்?
இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை
மேற்குமில்லை

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா,
செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா,
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்துக் கொண்டேன்,
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்.
அன்று சென்ற இளம் பருவம்
அது எண்ண எண்ண மனம் நிறையும்,
அன்று இழந்தது மீண்டும் ,
எந்தன் கையில் கிடைத்தது வரமே,
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன்
கலக்கமில்லை

- பழனி பாரதி
Add new comment
 
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
நா. முத்துக்குமார் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2010 00:00
படம்: பையா
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்க்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் மலையன் ஒரு பக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எறிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்றூ புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைக்கிறதே

- நா. முத்துக்குமார்
Add new comment
 
வீடுவரை உறவு வீதி வரை மனைவி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2010 00:00
ஆடிய ஆட்டமென்ன
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு!

- கண்ணதாசன்
Add new comment
 
கனாக் கண்டேனடி - தோழி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
யுகபாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2010 00:00
படம் : பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

கனாக்  கண்டேனடி -  தோழி
கனாக் கண்டேனடி
உன்
விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது
புரிந்தது போலே
...
உன்
முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது
அறிந்தது போலே


எதையோ என் வாய்
சொல்லத் தொடங்க
அதையே உன் வாய்
சொல்லி அடங்க
உதடுகள் நான்கும்
ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்
...
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும்
கட்டிக் கொள்ள  நான் கண்டேன்
...
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
...
எங்கெங்கோ  தேடித் தேடி
உன்னில் என்னை
நான் கண்டேன்


இடை மேல் என் விரல்
கவிதைத் கிறுக்க
படை போல் உன் விரல்
பதறித் தடுக்க
...
கூச்சம் என்னை
நெட்டித் தள்ள நான் கண்டேன்
...
கொடியினில் காய்கிற
சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில்
வாசனை பிடித்து
...
மூச்சில் உன்னைச்
சொட்டச் சொட்ட நான் கண்டேன்
...
நிறமில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
...
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை
நான் கண்டேன்

- யுகபாரதி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • அக்கரைச் சீமை அழகினிலே
  • மாஞ்சோலை கிளிதானோ
  • அந்தி மழை பொழிகிறது
  • அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
  • வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 2 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.