• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
அன்பென்ற மழையிலே அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2009 00:00

படம் : மின்சாரக் கனவு

 


அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!

வைக்கோலின் மேலொரு
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!

வின்மீன்கள் கண்பார்க்க
சூரியன் தோன்றுமா போல்
புகழ் மைந்தன் தோன்றினானே!

கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!

நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!

இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!

முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

- வைரமுத்து

Comments (2)
 
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பழனிபாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2009 00:00

படம்: கண்ணுக்குள் நிலவு

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால்
தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்
அச்சச்சோ...

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ?
அன்னையில்லா பிள்ளை கண்டால்
பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பே இல்லா உலகம் கண்டால்
அச்சச்சோ...

- பழனிபாரதி

Add new comment
 
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பஞ்சு அருணாசலம் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2009 00:00

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை

வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன
சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ

- பஞ்சு அருணாசலம்

Add new comment
 
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
நா.முத்துக்குமார் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 01 டிசம்பர் 2009 00:00

படம்: 7ஜி ரெயின்போ காலணி


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
கண் பேசும் வார்த்தை .......

- நா.முத்துக்குமார்

Add new comment
 
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
தாமரை ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2009 00:00

படம் : சுப்ரமணியபுரம்


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

- தாமரை

Add new comment
 
என்ன விலையழகே அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009 00:00

படம் : காதலர் தினம்

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு

உயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

- கவிஞர் வாலி

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • சொட்ட சொட்ட நனையுது
  • நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
  • ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
  • அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
  • பூவே பூச்சூடவா
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 7 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.