• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
இஞ்சி இடுப்பழகி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010 00:00
படம் : தேவர் மகன்
இஞ்சி இடுப்பழகா..... மஞ்ச செவப்பழகா....
கள்ளச் சிரிப்பழகா....
(வெறும் காத்து தாங்க வருது)

ம்..... மறக்க மனம் கூடுதில்லையே

...மறந்திடுவேனிகலே...

இஞ்சி இடுப்பழகி..... மஞ்ச செவப்பழகி....
கள்ளச் சிரிப்பழகி.... மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா....

தன்னந்தனித்திருக்க தத்தளிச்சி நான் இருக்க....
ஒன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையை
புன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்....
உன் கழுத்தில் மாலையிட
ஒன்னிரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக் கிளி கையத் தொட சின்னச் சின்ன கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....

அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு
நடக்கிற ஆத்த கேளு நீ தானா....
- வைரமுத்து
Add new comment
 
வாராயோ வாராயோ காதல் கொள்ள‌ அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
தாமரை ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010 00:00
படம்: ஆதவன்


வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்

ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை

உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ரல்லா

வாராயோ வாராயோ காதல் கொள்ள..

நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே

நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி

நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
- தாமரை
Add new comment
 
முன்தினம் பார்த்தேனே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
தாமரை ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2010 00:00
படம்: வாரணம் ஆயிரம்

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
- தாமரை
Add new comment
 
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
நா. முத்துக்குமார் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2010 00:00
படம் : வேல்


ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே

ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே

ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே
- நா. முத்துக்குமார்
Add new comment
 
ஹே அச்சம் அச்சம் இல்லை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2010 00:00

படம் : இந்திரா

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு


அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு


இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

- வைரமுத்து

Add new comment
 
செவ்வானம் சின்னப்பெண் சூடும் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2010 00:00

படம் : பவித்ரா


செவ்வானம்...
சின்னப்பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள்...
கன்னிப்பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

- வைரமுத்து

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • மன்றம் வந்த தென்றலுக்கு
  • அன்பென்ற மழையிலே
  • இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
  • அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
  • கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 6 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.