• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
ஒரு பொன் மானை நான் காண அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
டி. ராஜேந்தர் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2010 00:00
சலங்கையிட்டாள் ஒரு மாது
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழ ரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்


தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதியிவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு
பூப்போலப் பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது – எந்தன்
மனம் எங்கும் மணம் வீசுது


சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையில் பின்னழகில்
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது

- டி. ராஜேந்தர்
Add new comment
 
உயிராய் என்னை வளர்த்தவள் நீ அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வசீகரன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010 00:00
இசைத்தொகுப்பு: காதல்மொழி

உயிராய் என்னை வளர்த்தவள் நீ

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
கருவில் என்னை சுமந்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்

பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய்
பூவாய்த் தானனே எனை வளர்த்தாய்
அம்மா...அம்மா...அம்மா...அம்மா...

கடவுளை கண்முன் பார்த்தது இல்லை
உன் வடிவில் நான் பார்த்தேன்
உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை
உன் விழியில் நான் பார்த்தேன்

உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ
சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ
ஆயிரம் உறவின் வாசல் நீ
அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன்

நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான்
உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான்

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன்
கருவில் என்னை சுமந்தவள் நீ - உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்.

- வசீகரன்
Add new comment
 
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
நா. முத்துக்குமார் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010 00:00
படம்: பூ
ஆவாரம் பூ

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதுடா…
குழந்தை கால ஞாபகத்தில்..
இதழ்கள் விரித்தே கிடக்குதுடா….
நெடுநாள்… அந்த நெருக்கம்
எனக்கே அதை கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தையல்ல மெளனமாகும்…

ஆயுள் முழூதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலை ஆகி தவிழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…
பனியில்.. அது கிடக்கும்…
நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்…
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுசென்ற பட்டுபூவும்

- நா. முத்துக்குமார்
Add new comment
 
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
முத்துலிங்கம் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2010 00:00
படம்: விருமாண்டி  
உன்னை விட உலகத்தில்

உன்னை விட இந்த உலகத்தில்
ஒசந்தது ஒன்னும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு
சொல்லிக்கொள்ள யாரும் இல்லை
யாரும் இல்லை
வாக்குபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி  

என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க  
யாரும் இல்லை எவளுமில்லை
உன்னை விட .....
என்னை விட ........  

அள்ளி கொடிய காத்து அசைக்குது
அசையும் கோலத்துக் உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே
அலை பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காதே துதி பாடுது
சுத்தி சேருது
என்ன புது தாகம் அனல் ஆகுதே
என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காண கன வந்து கொல்லுது
இதுக்கு பேறு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா ....
உன்னை விட .....

காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கயில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு பனி   

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வாரம் ஏதும் கேட்போமா ?
சாகா வாரம் கேட்போம்
அந்த சாமிய அந்த சாமிய
காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆனா போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்  

வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி  

- முத்துலிங்கம்
Add new comment
 
தாவணி போட்ட தீபாவளி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
யுகபாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010 00:00
படம் : சண்டைக்கோழி

தாவணி போட்ட தீபாவளி
தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளைச்சி கால் மொளைச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு

இரவும் வருது
பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு எரிய
கணக்கு புரியல

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டுடூ விட்டுடூ ஆள விட்டுடூ
பொழச்சு போறான் ஆம்பள

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா
பம்பரத்த போல நானும் மாடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணீர் நீர் கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா
மகா மக குளமே! என் மனசுக்கேத்த முகமே
நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல, எனக்கு ஏதும் தோணல...
இதுக்கு மேல விளக்கும் பொது இடிக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே...

கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தெக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல்
இச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்த வாலு குறும்பு தெழு
ஆனாலும் நீன் ஏஞ்சலு
ஈரக்கொல .. குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாலே
இவ ஒர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

- யுகபாரதி
Add new comment
 
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2010 00:00
படம் : வருஷம் 16
பழமுதிர்ச் சோலை
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
- கவிஞர் வாலி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • எழுது எழுது என் அன்பே
  • ஒருவன் ஒருவன் முதலாளி
  • ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
  • விழியில் விழுந்து இதயம் நுழைந்து
  • நீல வான ஓடையில்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 4 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.