• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
அக்கரைச் சீமை அழகினிலே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பஞ்சு அருணாச்சலம் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 08 ஜூன் 2010 00:00
படம் : பிரியா

சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

மஞ்சள் மேனிப்பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும்
மொழிகேட்டு கிளி பேசும்

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்

- பஞ்சு அருணாச்சலம்
Add new comment
 
மாஞ்சோலை கிளிதானோ அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
முத்துலிங்கம் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 01 ஜூன் 2010 00:00
படம்: கிழக்கே போகும் ரயில்

மாஞ்சோலை கிளிதானோ

மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ


நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழைமுகில்

- முத்துலிங்கம்
Add new comment
 
அந்தி மழை பொழிகிறது அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 25 மே 2010 00:00
படம்: ராஜ பார்வை
அந்தி மழை பொழிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே றுமையிலே
எத்தனை நாளடி இள மயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே


தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

- வைரமுத்து
Add new comment
 
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
நா.முத்துகுமார் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 18 மே 2010 00:00
படம் : சந்தோஷ் சுப்ரமணியம்

அடடா அடடா எனை ஏதோ
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி

ஏ வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்

- நா.முத்துகுமார்
Add new comment
 
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
நா. முத்துக்குமார் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 11 மே 2010 00:00
படம்  : தாமிரபரணி
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

நான் திமிறா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்ப உப்ப போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில்கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

உறவுகள் எனக்கு அது புரியல
சில உணர்வுகள் எனக்கு அது வெளங்கல
கலங்கர விளக்கமே இருட்டுல
பெத்ததுக்கு தண்டனைய குடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்தையே தெளிசுடேன்
அன்புல அரலிய வெதச்சுடேன்

அட்ட கத்தி தன்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டு கத்திஆகா அது மாறி இப்ப வேனை ஆச்சு
பட்டாம் பூச்சி மேல ஒரு தொடங்குச்சி மூடியதே
கண்ணாம்பூச்சி அட்டதுல கண்ணு இப்ப காணலையே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

படச்சவன் போட முடுச்சு இது என் கழுத்துல மாட்டி இழுக்குது
பகையில மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழை இது நான் கை தொடும்போது மறையிது
மேகமே சோகமா உறையிது சூர தேங்காய் போல என்ன சுக்கு நூற உடைக்காதே
சொக்கம் பனை மேல நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகயில ஈர குலை வேகிறதே
கூட்டான்சொறு ஆக்கயிலே தெரிக்காத்து விசியதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

நான் திமிறா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்ப உப்ப போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில்கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

- நா. முத்துக்குமார்
Add new comment
 
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பழனி பாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 04 மே 2010 00:00
படம்: நினைத்தேன் வந்தாய்

வண்ண நிலவே
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒழியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா

கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

- பழனி பாரதி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • ஒரு பொன் மானை நான் காண
  • உயிராய் என்னை வளர்த்தவள் நீ
  • ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
  • உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
  • தாவணி போட்ட தீபாவளி
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 3 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.