| எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| பா. விஜய் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011 00:00 |
|
படம்: வின்னர்
![]() எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
(எங்கிருந்தாய்...)
நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்
(எங்கிருந்தாய்...)
இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்
(எங்கிருந்தாய்...)
-பா. விஜய்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


