| ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| நா. முத்துக்குமார் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010 00:00 |
|
படம்: பூ
![]() ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு… சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை அதை சொல்லாமல் போனாலும் புரியாதா… ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு… காற்றில் ஆடி தினந்தோறும்… உனது திசையை தொடருதுடா… குழந்தை கால ஞாபகத்தில்.. இதழ்கள் விரித்தே கிடக்குதுடா…. நெடுநாள்… அந்த நெருக்கம் எனக்கே அதை கிடக்கும் சருகுகள் சத்தம் போடும்… தினம் சூழ்நிலை யுத்தம் போடும்… அதன் வார்த்தையல்ல மெளனமாகும்… ஆயுள் முழூதும் தவம் கிடந்தே… ஒற்றை காலில் நிற்குதடா… மாலை ஆகி தவிழ்ந்திடவே… உனது மார்பை கேட்குதடா… பனியில்.. அது கிடக்கும்… நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்… வண்ணங்களெல்லாம் நீ தான் அதன் வாசங்களெல்லாம் நீ தான் நீ விட்டுசென்ற பட்டுபூவும் - நா. முத்துக்குமார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


