| எழுது எழுது என் அன்பே |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| வசீகரன் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2010 00:00 |
|
படம் : காதல் கடிதம்
![]() எழுது எழுது என் அன்பே-ஒரு கடிதம் எழுது என் அன்பே உன்னை நான் நேசிக்கிறேன் அதனால் தானே சுவாசிக்கிறேன் பனியில் உறையும் என் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் உனைப்பார்த்து பாசம் நேசம் தருவாயே-என்பாதை எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என் பார்வை நீயேன் வரவில்லை ? அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி மழையாக என்னை வந்து நனைப்பாயா? மனசில் பூக்கும் என் பூக்கள்- உன் மாலை ஆகும் வேளை வரும் பூவின் வாசம் தருவாயே - என் மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என் உயிரோடும் உடலோடும் நீதானே- உன் உறவாலே எனை வந்த தாலாட்டு காதல் வாழ்க காதல் வாழ்க பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை காதல் வாழ்க காதல் வாழ்க - வசீகரன்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


