• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

பழந்தமிழ் கவிதைகள்
குறுந்தொகை : மருதம் - காதற் பரத்தை கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஆலங்குடி வங்கனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 16 ஆகஸ்ட் 2009 00:00
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

-ஆலங்குடி வங்கனார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - கண்டோர் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பெரும்பதுமனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 09 ஆகஸ்ட் 2009 00:00
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

-பெரும்பதுமனார்

Add new comment
 
குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பதுமனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 02 ஆகஸ்ட் 2009 00:00
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

-பதுமனார்

Add new comment
 
குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
நரிவெரூ உத்தலையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2009 00:00
அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.

-நரிவெரூ உத்தலையார்

Add new comment
 
குறுந்தொகை : நெய்தல் - தலைமகள் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
காமஞ்சேர் குளத்தார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூலை 2009 00:00
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.

-காமஞ்சேர் குளத்தார்

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
தேவகுலத்தார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2009 00:00

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

-தேவகுலத்தார்

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று
  • குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று
  • புக்கார் அமரர் பொலந்தார் அரசன்
  • சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
  • கலித்தொகை -> குறிஞ்சிக்கலி
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 10 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.