• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

பழந்தமிழ் கவிதைகள்
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
தொல்கபிலர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2009 00:00

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.

- தொல்கபிலர்

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கபிலர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2009 00:00

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.

- கபிலர்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஓதலாந்தையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 13 செப்டம்பர் 2009 00:00

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

- ஓதலாந்தையார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
மாமூலனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 06 செப்டம்பர் 2009 00:00

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

- மாமூலனார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஓரம்போகியார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2009 00:00

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.

- ஓரம்போகியார்

Add new comment
 
குறுந்தொகை : மருதம் - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கயமனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 23 ஆகஸ்ட் 2009 00:00

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.

- கயமனார்

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • குறுந்தொகை : மருதம் - காதற் பரத்தை கூற்று
  • குறுந்தொகை : பாலை - கண்டோர் கூற்று
  • குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று
  • குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று
  • குறுந்தொகை : நெய்தல் - தலைமகள் கூற்று
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 9 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.