• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

பழந்தமிழ் கவிதைகள்
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கோப்பெருஞ்சோழன் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009 00:00


அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

- கோப்பெருஞ்சோழன்

Add new comment
 
குறுந்தொகை : மருதம் - தலைவன் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பரணர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009 00:00


எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.

- பரணர்

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கபிலர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2009 00:00


வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

- கபிலர்

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பேரெயின் முறுவலார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2009 00:00

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.

- பேரெயின் முறுவலார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பாலைபாடிய பெருங்கடுங்கோ ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2009 00:00

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.

- பாலைபாடிய பெருங்கடுங்கோ

Add new comment
 
குறுந்தொகை : பாலை - செவிலி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஔவையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 04 அக்டோபர் 2009 00:00

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
ேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

- ஔவையார்

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று
  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று
  • குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று
  • குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று
  • குறுந்தொகை : பாலை - தோழி கூற்று
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 8 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.