• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

பழந்தமிழ் கவிதைகள்
குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கொல்லனழிசி ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 20 டிசம்பர் 2009 00:00

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.

- கொல்லனழிசி

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கபிலர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 13 டிசம்பர் 2009 00:00


யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

- கபிலர்

Add new comment
 
குறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
பரணர் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 06 டிசம்பர் 2009 00:00


கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.

- பரணர்

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஔவையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 00:00


அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

- ஔவையார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தோழி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
சேரமானெந்தை ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009 00:00


நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.

- சேரமானெந்தை

Add new comment
 
குறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஓதலாந்தையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 15 நவம்பர் 2009 00:00


வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.

- ஓதலாந்தையார்

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று
  • குறுந்தொகை : மருதம் - தலைவன் கூற்று
  • குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று
  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று
  • குறுந்தொகை : பாலை - தோழி கூற்று
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 7 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.