• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

பழந்தமிழ் கவிதைகள்
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
அள்ளூர் நன்முல்லையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2010 00:00

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

- அள்ளூர் நன்முல்லையார்

Add new comment
 
குறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஆதிமந்தியார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2010 00:00

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.

- ஆதிமந்தியார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கச்சிப்பேட்டு நன்னாகையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2010 00:00

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

- கச்சிப்பேட்டு நன்னாகையார்

Add new comment
 
குறுந்தொகை : குறிஞ்சி - தலைன் கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஔவையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2010 00:00

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
- ஔவையார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
ஔவையார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜனவரி 2010 00:00

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

- ஔவையார்

Add new comment
 
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
வெள்ளிவீதியார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2009 00:00


கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.

- வெள்ளிவீதியார்

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று
  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று
  • குறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று
  • குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று
  • குறுந்தொகை : பாலை - தோழி கூற்று
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 6 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.