| வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| கிள்ளிமங்கலங்கிழார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 04 டிசம்பர் 2011 00:00 |
|
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று
![]() வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே.
-கிள்ளிமங்கலங்கிழார்.
Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


