• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

திரையில் மலர்ந்த கவிதைகள்
நானே நானா யாரோ தானா அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கவிஞர் வாலி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 07 செப்டம்பர் 2010 00:00
படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல் இனிமேல்
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

- கவிஞர் வாலி
Add new comment
 
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 31 ஆகஸ்ட் 2010 00:00
படம் : கிராமத்து அத்தியாயம்

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டி கொண்டு ஆடவா
ஹே ஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேக்கவா கையில் உன்ன சேக்கவா
ஊ ஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்
சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போக போறேன்

- கண்ணதாசன்
Add new comment
 
அட பொன்னான மனசே பூவான மனசே அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
டி. ராஜேந்தர் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2010 00:00
படம் : மைதிலி என்னை காதலி

அட பொன்னான மனசே பூவான மனசே
காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே....
கண்ணீரை மருந்தாக்குங்களே...
கண்ணீரை மருந்தாக்குங்களே..."

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேலே ஆசை

ஆசை வச்ச பச்சை கிளியோ
வேற ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேற தென்றலோடு ஆடியிருந்தா
நீ ஆசை வச்ச பச்சை கிளியோ
வேற ஜோடி தேடி போயிருந்தா
நீ பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேற தென்றலோடு ஆடியிருந்தா

- டி. ராஜேந்தர்
Add new comment
 
தாழம்பூவே வாசம் வீசு அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
புலமைபித்தன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 17 ஆகஸ்ட் 2010 00:00
படம் : கைகொடுக்கும் கை
தாழம்பூவே
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயைப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பிறப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நீரும் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது

என்னுயிரே ஏஏஏஏ..

என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

- புலமைபித்தன்
Add new comment
 
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா? அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
யுகபாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2010 00:00
படம் : சந்திரமுகி

சந்திரமுகி
கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?

அந்த நேரம்
அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?

கொஞ்ச நேரம்
கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா?

இந்த நேரம்
இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?

--

கண்ணில் ஒரழகு
கையில் நூறழகு
உன்னால் பூமி அழகே

உன்னில் நானழகு
என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே

கண்ணதாசன்
பாடல்வரி போல
கொண்ட காதல் வாழும் நிலையாக

கம்பன் பாடிப்
போன தமிழ்ப் போல
எந்த நாளும் தேகம் நலமாக

மழை  நீயாக
வெயில் நானாக
வெள்ளாமை இனி

--
கொக்கிப் போடும் விழி
கொத்திப் போகும் இதழ்
நித்தம் கோலமிடுமா?

மக்கள் யாவரையும்
அன்பில் ஆளுகிற
உன்னைப் போல வருமா?

வெளி வே-ஷம்
போட தெரியாமல்
எனதாசை கூட தடுமாறும்

பல கோடி
பேரின் அபிமானம்
உனக்காக ஏங்கும் எதிர்காலம்

நீ என் நாடு
நான் உன்னோடு
மெய் தானே இது
- யுகபாரதி
Add new comment
 
இது தாய் பிறந்த தேசம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
அறிவுமதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 03 ஆகஸ்ட் 2010 00:00
படம் : சிறைச்சாலை
flag

இது தாய் பிறந்த தேசம்
நம் தந்தை ஆண்ட தேசம்
இது நாம் வணங்கும் தேசம்
உயிர் நாடி இந்த தேசம்
மண் பெரிதா உயிர் பெரிதா
பதில் தரவா இப்போதே
வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம்

வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமி சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று
நிலத்தடியில் புதைந்திருக்கும்
பினங்களுக்கும் மனம் இருக்கும்

தாயோ பத்து மாசம் தான்
அதிகம் சுமந்தது தேசம் தான்
உயிருன் உடலும் யார் தந்தார்
உணர்ந்து பார்த்தால் தேசம் தான்
இந்த புழுதிதான் உடலாச்சு
இந்த காற்று தான் உயி மூச்சு
இன்று இரண்டுமே பரிப்போச்சு
இன்னும் என்னடா வெரும் பேச்சு
கை விலங்கை உடைத்திடடா
எரிமலையே எழுந்திடடா

- அறிவுமதி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
  • ராத்திரியில் பூத்திருக்கும்
  • உசிரே போகுது உசிரே போகுது
  • பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி
  • பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 12

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.