• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
சின்ன சின்ன ஆசைகள்... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
இதயவன் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 00:00
சின்ன சின்ன ஆசைகள்...
நான்...
வானில் பறந்து
மேகமாய் ஓட
வேண்டும்!

நான்...
நிலவில் விழுந்து
வின்மினாய் விழ
வேண்டும்!

நான்...
தென்றலில் புகுந்து
புயலாய் மாற
வேண்டும்!

நான்...
மலரில் நுழைந்து
தேனாய் சிந்த
வேண்டும்!

நான்...
கடலில் அலைந்து
கரையாய் ஒதுங்க
வேண்டும்!

நான்...
பகலில் பட்டாம்
பூச்சியாய் பறக்க
வேண்டும்!

நான்...
இரவில் மின்மினி
பூச்சியாய் திரிய
வேண்டும்!

நான்...
தாமரை இலையில்
பனித்துளியாய் தூங்க
வேண்டும்!

நான்...
மரத்து கிளையில்
இலையாய் தொங்க
வேண்டும்!

என்றும் நான்
இயற்கை உடன்
வாழ வேண்டும்!

- இதயவன்
Add new comment
 
மனப்பறவை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
புதியமாதவி ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 00:00
மனப்பறவை
நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது

ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்பு பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது

போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக்கொடுக்கிறது
காற்று.

சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.

ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை

- புதியமாதவி
Add new comment
 
வட்டம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
அபிமன்யு ராஜராஜன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 00:00
வட்டம்
இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!

எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!

விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!

காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!

மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!

ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்!

- அபிமன்யு ராஜராஜன்
Add new comment
 
உள்ளூர் அழகி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
முகவை சகா ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:00
உள்ளூர் அழகி ,முகவை சகா
ரெட்டை  ஜடை பின்னலுடன் புத்தகம் சுமந்து
வருவாயே அந்த வயதிலேயே
அறிமுகம் ஆகிவிட்டாய் என் காதலுக்கு நீ!

நீயாய் வளர்த்து நீயாய் பறித்து நீயாய் கோர்த்து
உன் கூந்தல் சூடும் பூச்சரம் தோற்றுத்தான் போகும் கடைசியில்
உன் புன்னகைக்கு

என் கடைக்கு வந்து கால் கிலோ சர்க்கரை வாங்க
அரை கிலோ சிரிப்பாயே
ஒரு மூடை சர்க்கரைக்கும் இனிப்பு தீர்ந்துவிடும்

உன் அக்காவின் திருமணதிற்கு தாவணியோடு நின்றாயே
மாப்பிள்ளையின் தம்பியாய்
மறுபிறவி கேட்டது மனசு

ஏழாம் முறையாய் நான் கொடுத்த காதல் கடிதத்தை
கிழித்து போட்டு கன்னத்தில் அறைந்து சொன்னாயே
"நீ ஒரு ஏழை, பிழைக்க வழி பார்" என்று

ஏழரை சனி என்று வெறுத்தாலும் பரவாயில்லை
ஏழை நீ என்று வெறுத்து விட்டாயே

இன்று நரை முடியுடனும், இரண்டு பிள்ளையுடனும்
உன் பணக்கார கணவன் பாதியில் விட்டதாய்
என் அம்மாவிடம் சொல்கிறாயே

என் வறுமை வசதியானது
உன் வசதி இன்று உன் வாழ்வை குடிக்கிறது
என் மனைவி சொல்கிறாள் என்னிடம்
"ஏன் அந்த அக்கா என்னை மட்டும் ஏக்கமாய் பார்கிறார்கள்
அருகிலே போனால் விழகி போகிறார்கள் " என்று

மௌனமாய் சிரித்தேன்
நான் உன்னிடம் வாங்கிய ஏழாவது அறை
இன்று ஆற துவங்கியது

- முகவை சகா
Add new comment
 
மெளனமான கொடூரம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
வே பிச்சுமணி ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 00:00
மெளனமான கொடூரம்
புதைக்கப்பட்ட பிணங்கள்
உடற்கூறு ஆய்வுக்காக
மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டு கிடக்கின்றன

குடலை பிடுங்கும்
நாற்றம் வீசுகிறது
உறவுகள் பொறுத்து நிற்கின்றன
எதிரிகளும் கூட அப்படியே

சிங்கம் வேட்டையாடி
உண்டு மிஞ்சி விட்டு சென்ற
காட்டெருமை உடலை
கழுதைபுலிகள் குதறி தின்கினறன

மருமகளால் உன் அம்மா
வருத்தமடைகிறாளென
உனக்கு ஏற்படும் ஆதங்கத்தில்
பங்கேற்றொரு நடிப்பு

அடிமனதில் கொடூர சந்தோஷம்
பூப்பதை கண்களினோரம்
மறைக்க திரும்புகையில்

இதழ்களில் வடியும் குருதியை
துடைக்காமல் நிற்கும்
எதிர்வினை செய்யாத
என் பலநாள் மெளனம்

- வே பிச்சுமணி
Add new comment
 
நம்பி(கை) பிடி தோழி... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சீமான்கனி ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2010 00:00
நம்பி(கை) பிடி தோழி...
கார்கால  சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;
கடிவாளம் போடாமல்  
காற்றோடு போராடி
கைகொண்டு நிலைமுட்டும்
கதவுகள்;
படுக்கையில் கூட்டு புழுவாய் நீ...

மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.

கூனிப்போன உன் முதுகேறி கொசுக்கள்
குதிரைச்சவாரி செய்யலாம்!
ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய்  கூச்சலிடலாம்!
சோற்றுபருக்கையின்   கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்! அதன்
இளஞ்சூட்டில் இதயம்  வெந்து
இறந்தும் போகலாம்!
ஜன்னல் கம்பியாய் தேய்ந்த தேகம்
மழைச்சாரல் பட்டு  முறிந்துபோகலாம்!
போதும்!

துவண்டு துவண்டு வண்டு தீண்டும்
செண்டாய் இருந்தது போதும்!
அச்சமில்லை பாடிய பாரதியின் வாக்கை
துச்சமாய் எண்ணி துவண்டு கிடைக்காமல்
துளிர்த்துவா.

சொல்லுக்கே சோணங்கி விட்டால்
சொர்க்கம்கூட சுகமாய் இராது
சுருக்கென எழுந்து வா.

அடகுவைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று.
கனவுகள் வெறும் கற்பனைகள் அல்ல
அள்ளிவீசிய உன் கனவுகளை கண்டெடு.

மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால்
காற்று  கதறும் காலநிலை சிதறும்.

உன் பட்டுச் சிறகுகள் படர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு.

- சீமான்கனி
Comments (1)
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • ஓடி விளையாடு
  • அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
  • யாவுமாய் நீ
  • அக்கரைப் பச்சை
  • பெண் பார்க்கும் படலம்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.