• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
ஓடி விளையாடு அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
கலைமகன் பைரூஸ் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 00:00
ஓடி விளையாடு
ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!

கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!

யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் வின்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!

சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென யறியாதுநீ!

ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!

இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!

- கலைமகன் பைரூஸ்
Add new comment
 
அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ப மதியழகன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2010 00:00
அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்

மலர்கள் மலர்வதும்,
மணம் பரப்புவதும்
பலனை எதிர்ப்பார்த்தா?

சேவல் கூவுவதும்,
மயில் ஆடுவதும்
மதுவின் கிறக்கத்தினாலா?

தென்றல் வீசுவதும்,
மழை பொழிவதும்
அரச கட்டளைக்கு அடிபணிந்தா?

குழந்தை அழுவதும்,
பாவ மன்னிப்புக் கோருவதும்
கடவுளுக்கு பயந்தா?

இரவும், பகலும்
ஒன்று சேராமல் இருப்பது
இயற்கையின் விதியா?

பகலில் நிலவும், விண்மீனும்
மறைந்து போவது
சூரியனின் சூழ்ச்சியா?

பிறப்பும், இறப்பும்
நித்தமும் நிகழ்வது
சூன்யத் தத்துவமா?

மாயை
கன்னி அவள் காத்திருக்க
கண்ணன் அவன் தோள்கொடுக்க
அன்பு நெஞ்சம் கலந்திருக்க
ஆசை உள்ளம் சமயம் பார்த்திருக்க
கனவு உலகம் கவர்ந்திழுக்க
இளமைக் கடல் ஆர்ப்பரிக்க
நாணத்திரை அகன்றிருக்க
ஆனந்த வேட்கையில் ஜீவன் மூழ்கியிருக்க

உலகமும், உயிர்களும் சற்றே மறைந்திருக்க
பக்தியும், பயமும் சிந்தையிலிருந்து நீங்கியிருக்க
மிருகம் மட்டும் எஞ்சி நிற்க
மீண்டும் மண்ணில் பிறவியெடுக்க

மோகத்தீயில் முக்குளிக்க
வாலிபத்தை வரமாய் கேட்க
தேவதையை தனது இளமைக்கு
துணையாய் கொடுக்க
மண்டியிட்டு மருகுகிறது
மானிடனின் நெஞ்சம்

மாயையின் வலையில் வசமாகச்
சிக்கிச் சுழன்றபடியே...

- ப.மதியழகன்
Add new comment
 
யாவுமாய் நீ அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ஒளியவன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2010 00:00
யாவுமாய் நீ
என்னுள்ளிருந்த மிருகம்
வெளிப்பட்டது இதுவே
முதல் முறையாயிருக்கலாம்.

உன் மனதில்
ஊசலாடிய கேள்விகள்
கண்கள் வழியே
கண்ணீர் கயிறுகளில்
ஆடின.

தெரிந்தோ தெரியாமலோ
நீ உடைத்து விட்ட
புகைப்படத்தின்
கண்ணாடிக் கூடு
காட்டியது என்
நடுங்கும் விரல்களையும்
உடைந்த என் மனதையும்.

என் அணுக்கள்
எல்லாம் பரவிக்கிடக்கும்
என்னவள் இப்பொழுது
ஒரே ஒரு புகைப்படத்தில்தான்
உயிர் வாழ்கிறாள்.

கண்கள் கடந்து
விழுந்த கண்ணீர்
வழியே உன் தாய்
மீதான எனது பாசம்.

உன் பிஞ்சுக்
கரங்களால் என்
கன்னத்தில் கைவைத்து
"அழாதே அப்பா"
என்றாய்.

உடைந்த கண்ணாடியில்
உன் தாய் முகம் மேல்
உன் பிம்பம்!

- ஒளியவன்
Add new comment
 
அக்கரைப் பச்சை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
மாயாண்டி சந்திரசேகரன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 26 ஆகஸ்ட் 2010 00:00
அக்கரைப் பச்சை
சக்கரை வாழ்க்கையெண்ணி அக்கரைசெல்வர்
சக்கர வாழ்க்கை இதுவெனப் புரிந்து கொள்வர்
வறுமையை வெல்ல வாடிகனும் செல்வர்
வெறுமையை வெல்ல இதுவல்ல வழியென உணர்ந்து கொள்வர்

வறுமையின் கருமை வெந்து சாம்பலாகக் கூடும்
வாழ்வில் வெறுமையோ செந்தீயாய் தினம் எரியும்
சொத்தும் கிடைக்கும் பத்தும் கிடைக்கும்
சொகுசான வீடு கார் எனப் பல கிடைக்கும்
எல்லாம் கிடைத்தது போல ஊருக்குத் தெரியும்
உள்ளில் மெழுகாய் உருகுவது யாருக்குப் புரியும்?

சுகம் தொலைத்து நித்தம் முகம் தொலைத்து
அகம் நனைத்து சொந்தம் தினம் நினைத்து
வேதனையாய்க் கழியுது வாழ்க்கை இங்கு!

வேரை மறந்து ஊரை மறந்து
உற்றார் உறவினர் சுற்றம் மறந்து
பற்றில்லாமல் கிடைக்குது பல வெள்ளிப் பணம்
கொள்ளியாய் மாறி நித்தம் கொல்வது யார்க்கு புரியும்?

சொர்க்கத்திலும் சோகம் உண்டு
நரகத்திலும் சில இன்பம் உண்டு
தங்கத்திற்கும் சில குறைகள் உண்டு
தகரத்திற்கும் நல் குணங்கள் உண்டு

தலைமுறையை மாற்றிக் கொள்ள
தள்ளிச் செல்வதில் தப்பேதும் இல்லை
நடைமுறை இதுவெனப் புரிந்து கொண்டால் - நெஞ்சில்
அடைமழைக் காலமும் விடுமுறை எடுத்து கொள்ளும்.

அக்கறையாய் வாழ்வை அமைத்துக் கொண்டால்
எக்குறையும் சற்று எட்டியே நிற்கும்
இக்கரையோ அக்கரையோ
எக்கரையும் சக்கரையாய் இனிதே கரையும்!

- மாயாண்டி சந்திரசேகரன்
Add new comment
 
பெண் பார்க்கும் படலம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
மணிமேகலை ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2010 00:00
பெண் பார்க்கும் படலம்
பெண்ணின் கையில்
காபி டம்ளர்கள்
அடங்கிய தட்டு

இவள் தான் இனி
எங்கள் வீட்டின்
புது வேலைக்காரி!

- மணிமேகலை
Add new comment
 
வினைத் தொகை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 00:00
வினைத் தொகை,எழிலி
உறுதுன்பம்!

வயிற்றைக் குழைத்து
உடலைக் குறுக்கி
புற்றுக்குள் பாம்பாய்

மடங்கி நெளிந்து,

கால்களைப் பின்னி
முதுகின் கிரீடமாக்கி!

தாளம் தப்பாமல்
அடி சறுக்காமல்
உச்சி முதல் உள்ளங்
கால் வரை ஆட்டம்
காண  -
களைகட்டியது
கழைக்   கூத்து!

டோலக்கு அடிக்கும்
மனிதனுக்கு !

புல்லாக்குப்போட்ட
அவனின்  மனைவிக்கு!

அலுமினியத் தட்டில்
பிச்சை  திரட்டும்
சிறுவனுக்கு!

வளையத்திற்குள்
உடல் ஒடுக்கி,
உயரே கட்டிய
கயிற்றில்  கால்
பொருத்தி,
ஆகாசத்தையும்
பூமியையும்
தன் நெற்றிப் பொட்டில்
வசப்படுத்தி,
பின்னுக்கும்
முன்னுக்குமாய்
லாவகம் செய்யும்
உழைப்பாளி அவளின்
ஒவ்வொரு நாளைய
வலி
ஒருபோதும்
புரிதலில்லை!

அந்தச் சிறுமியின்
சார்பில்
நமக்கோ - ஒப்புக்கு
உச்சுக்
கொட்டலும்  ஒரு ரூபாய்
பிச்சையிடுதலும்  தவிர
பேருதவி  வேறொன்றில்லை!

- எழிலி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • இல்லவை நகுதல்
  • கிராமத்து காதலி
  • நல்லதோர் வீணைசெய்தே
  • காதலுடன்
  • கள்ளி (பெண்) பால்...
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 2 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.