• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
சொர்க்க வாசல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
அனுபமா உதிவ் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2010 00:00
சொர்க்க வாசல்


ஆடுகின்ற பொம்மையினால்
ஆட்டம்போடும் குழந்தை!
ஆடாத தொட்டினிலே
அழுதிடுமே குழந்தை!

எறும்பில்லாப் புற்றினில்
பாம்புகள் புகுந்துவிடும்
பூசையில்லாக் கோவிலில்
வௌவால்கள் குடியிருக்கும்!

இடம்பெயர்ந்து போனால்தான்
கடும்பாறை படிக்கட்டாம்
அப்படியே இருந்தாலே
நடத்தாலும் பிணந்தானே!

நறுங்கிப்போன சிறுவண்டும்
நறுந்தேனைத் தேடுதே!
நல்லுறவைக் காணாது
நெற்பறவை வாடுதே!

காற்றுகூட புகுந்து
மூங்கில் இசையாகுமே!
கான மயில் இரைதேடி
நீர்த் திசைபோகுமே!

கருவாடு கடல்தேடி
மீண்டும் திரும்புமா?
இறந்து போன நிகழ்காலம்
மீண்டும் அரும்புமா?

சொர்க்க வாசல் கதவு
ஒருமுறைதான் திறக்கும்
திறந்த போது நுழைந்துகொண்டால்
பல்லாயிரங்கள் பிறக்கும்

அப்புறம் என்றால்
ஆறுமாதம் ஆகும்
இப்போதே வாழ்வாய்!
இந்நிமிடம் வாழ்வாய்!

- அனுபமா உதிவ்
Add new comment
 
முதிர் ஆண் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ஆனந்த் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 17 ஜூன் 2010 00:00
முதிர் ஆண்


வயதாகியும் வாலிபத்தை விடாமல்
துரத்தும்,
ஆண் பிரும்மாச்சாரி
நான் (மட்டுந்தானா)

வீணாய் போன வாலிபம்,
விட்டு வைக்காத சகவாசங்கள்
தொலைத்த மதிப்பெண்கள்
வேலையில்லாத படிப்பு
வீட்டு சுமைகள்
வட்டி கடன்
வில்லங்கங்கள்.

மனம் தேடும் துணையை,
தேட வேண்டி
முதியோர் இல்லத்திற்கா?

- ஆனந்த்
Add new comment
 
கடுதாசி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 16 ஜூன் 2010 00:00
கடுதாசி,எழிலி


செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம்,
(ஆறாம் வகுப்பு)

அன்புள்ள அப்பாக்கு,

பள்ளிக் கூடம்  தெறந்தாச்சு!
பாடமெல்லாம் புதுசாச்சு!

பள்ளிக்கூட
உடுமாத்துத் துணியாட்டம்
பாடம் மொத்தமும் ஒண்ணாச்சு!

பட்டணத்தத்தாண்டி  நம்ம
ஊரும்   தெரிஞ்சாச்சு!

நம்மூரு இன்னைக்கு
பேப்பர்ல வந்திருக்கு !

என்னைக்காவது ஒரு நா(ள்)
என் படமும் டி.வி.யில!

இன்னாரு மகதா(ன்)
மாநிலத்துல மொதன்னு
அன்னைக்கு
ஒம்பேருக்கும்,நம்மூருக்கும்
பெருமை வரும்  நிச்சியம்!

' சமச்சீர்'  கல்வி
சகலருக்கும் பொதுவாச்சு!
சத்துணவு  (திட்டம்)போல
புத்திக்கு ஊட்டமாச்சு!

என்ன நா(ன்) சொல்லுதேன்னு
ஒனக்குப்
புரிஞ்சிதோ தெரியலை,நீ
அடுத்தமொற   வரையில
கட்டாயம்   நா(ன்)
பேசுவேன்  இங்கிலீசுல!

புறப்படறேன்
இப்போ  நேரமாச்சு,
ஆறாம் வகுப்புப்
புத்தகம்
வாங்கணும் நாழியாச்சு!


பெறுநர்,
கொளுத்து - கோயிந்தன்,
துபாய்.

- எழிலி
Add new comment
 
நீ... நான்... காதல்... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
முகவை சகா ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 14 ஜூன் 2010 00:00
நீ... நான்...  காதல்...

சினிமா பார்த்துவிட்டு வெளியேறியதும்
போகும் வழி எங்கும் படத்தின் காட்சிகளை
பேசிக்கொண்டே செல்லும் மக்களைப்போல
உன்னை பிரிந்ததும் உன்னை பற்றியே
பேசிகொள்வேன் தனியாய்

எதேச்சையாக ஒருமுறை என்னை
பார்த்திருப்பாய் நீ
மறுபடியும் பார்க்க மாட்டாயா என
மரண பார்வை பார்துகொண்டிருபேன் நான்

" அவளிடம் அப்படி என்னடா இருக்கிறது "   என்று
என் நண்பர்கள் கேட்டால் அன்று முழுதும்
தூங்காமல் சந்தோசபடுவேன்.
எல்லோரும் ரசிக்கும் சராசரி பெண்ணாய்
இல்லாமல் நான் மட்டும் ரசிக்கும்
சமத்து பெண்ணாய் இருக்கிறாயே என்று

உன்னை அழகியாக காட்டியது என் கண்கள்
பேரழகியாக காட்டியது என் காதல் தான்

என் அருகில் இருக்கும் எல்லோரிடமும் பேசிவிட்டு
என்னிடம் மட்டும் ஒரு பார்வை
உதிர்த்து போவாய்
எனக்கு தெரியும்
அம்மனின் அருள் எபோதுமே பக்தனுக்கு தான்
அருகிலே இருந்து அர்ச்சனை செய்யும்
அர்ச்சகனுக்கு இல்லை
அருகிலே இருப்பவர்கள் அர்ச்சகர்கள்
நான் உன் பக்தன்

என் கடைசி வாழ்க்கை வந்தாலும்
என் காதலை சொல்லமாட்டேன் உன்னிடம்
கல்யாண நாள் குறித்தால் சொல்லி அனுப்பு
மொய் எழுதும்போது என் பெயருக்கு நேரே
உயிர் என எழுத வருகிறேன்

- முகவை சகா
Add new comment
 
ரகசிய காதலியே அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
வ. பிரவின் குமார் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 12 ஜூன் 2010 00:00

உன் இதயத்துடன்


தனியே பயணித்து
தவித்த எனக்கு

உன்னுடன் பயணிப்பது
புதிய அனுபவம்

இன்னும் தனியே தான் பயணிக்கிறேன்
ஆனால்
உன் இதயத்துடன்

- வ. பிரவின் குமார்

Comments (6)
 
மழைக்கு தெரியாது அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சாந்தினி வரதராஐன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2010 00:00
பாவம் மழை
பாவம் மழை
இடியும் மின்னலும்
கீறும் வலி பொறுத்து
மண்ணுக்காய் நீளும் கரங்களை
மறுக்கும் மனங்கள் உண்டென்று
மழைக்கு தெரியாது
மனிதர்கள் குணத்தால்
மாறுபட்டவர்களென்று.

வீடு நனையுதென்றும்
விறகு புகையுதென்றும்
ஆடை உலரவில்லையென்றும்
முகம் சுளிக்கும் மனங்களை
மழைக்கு தெரியாது.

மழை நினைத்திருக்கும்
மனிதர்கள் மகிழ்வார்களென்று
மண்ணும் மரங்களும்
மலர்களும் மலைகளும்
சின்ன மழலைகளும்
மகிழ்வார்கள்
மழைகண்டு
முகம் சுளித்து
குடை விரித்து
கதவடைக்கும்
மனிதர்களுக்காய்
ஒளி உமிழும்
உயிர் துறந்து
முகம் கறுத்து
வலி பொறுத்து
கரம் கொடுக்கும்
மழைக்கு தெரியாது
மனிதர்கள் மனங்காளல்
மாறுபட்டவர்களென்று.

- சாந்தினி வரதராஐன் (நன்றி : வார்ப்பு)
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • எங்கே சென்றாய் ? தனிமையில் நான் இங்கே...
  • வீடு
  • வாழ்க்கை
  • அண்மைச் சுட்டு
  • நமது உரிமைக்கான பட்டாணைகள்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 10 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.