• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
மெல்லினம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
புதுவை பாமல்லன் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 28 ஜூன் 2010 00:00
மெல்லினம்

மெல்லிய மரணம் அரங்கேறும்
மெளன இலக்கிய மன்றம் - காதல்
சத்தமின்றி நிகழுமோர் யுத்தகாண்டம்
சத்தியத்தில் சங்கமிக்கும் உறவுகோலம் - அது
நித்தியத்தில் உறுவாகும் சாமவேதம்
முக்தியினை முன்காட்டும் முழுமைகீதம்

விழிவழி வருதா காதல்
மொழி வழி தருவதா
விழைவு தனில் நுழைவதா
விந்தை நகையினில் மலர்வதா
விழும் சிந்தையில் சிறப்பதா
விளங்காப் பொருளில் புலர்வதா
விளையும் பொழுதே உனையறி
வீழாதென்றும் உண்மைக் காதல்

- புதுவை பாமல்லன்
Add new comment
 
இரவல் இரவுகள் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 25 ஜூன் 2010 00:00
இரவல்  இரவுகள்
எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!

இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம்,  என் உணவு,
என் பாவனைகளில்
நான் தோற்றுப்போனதே
கிடையாது!

எல்லா மகிழ்ச்சிகளும்,
வேதனைகளும்
பழக்கப்பட்டவைகளே!

தற்போதைய  நாட்களில்
என் பார்வைக்  குறைவு,
பசியின்மை, ரத்தக் கட்டிகள்,
மாத்திரைகள் உடலுக்குள்
செய்யும்  மாயஜாலம்,
யார் யாரோ வந்துபோகும்
ஆஸ்பத்திரி முதல்
மாடியின்    கிழக்கில்
என் திரை மூடிய அறை,

விரைவாய்ப் பரவும்
வேதியல் வாசம்,
தெர்மாஸ்  குடுவை
சுடுதண்ணீர், காபி,
உப்பில்லாதக் கூழ்,
இயற்கை  உபாதைக்கு
மறைவாய்ப் பாலிதீன் பை!

என் தலைமுறைகளின் 
உறக்கம், 
உணவு, 
மகிழ்ச்சி, 
சௌஹரியம்,
தற்காலிகமாய்-
என்னால்   தடைப்பட...

நிச்சயமாய் நான் இரவல்
இரவுகளில்  தவிக்கிறேன்!
என்பது மட்டுமே  உண்மை  -
மரணம்  வரும்
வரையில்!

நான் உறங்குவதுமில்லை,
விழிப்பதுமில்லை!
- எழிலி
Add new comment
 
நீ அழுக்கான அழகி... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சீமான்கனி ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 24 ஜூன் 2010 00:00
நீ அழுக்கான அழகி...
இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட  அழ(ழுக்)கையெல்லாம்  
குடித்துவிட்டு நாள் முழுதும் என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது.

உன் அழகு தாக்கிய குளியலறை
கதறுகிறது கடவுளிடம் என்னை ஏன்
கல்லாய் படைத்தாய் என்று.

தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!

பொதிகையிலிருந்து புறப்படும்
தென்றல் என்பதெல்லாம் பொய் ;
குளித்து விட்டு நீ முடி உலர்த்தும்
சாரலில்லிருந்து புறப்படும் என்பதே மெய்.

நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து  விடுகிறேன்.

குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி.

- சீமான்கனி
Add new comment
 
ஊமையரின் கதையாடல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சு.மு.அகமது ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 23 ஜூன் 2010 00:00
ஊமையரின் கதையாடல்

ஒரு கவிதையின்
பகிர்ந்தளிப்பைப்  போலும்
அவர்களது கதையாடல்

செவிசாய்த்து
உன்னிப்பாய் கிரகிக்கும்  பாவனை
தேர்ந்த சொல்லாடலின்  சுவராஸ்யத்தை
உட் செலுத்தும் புத்துயிர்ப்பி

கடந்து சென்ற  பள்ளிக்க்கூடம்
பேருந்துப்பார்வையில் புள்ளியான பின்பும்
கண்களில் விரிந்திருந்த்து
அதில் கழித்த காலம்

நிரம்பி வழிந்த சம்பாஷணையில்
நாவின் தீயொலியற்ற
விரல் மொழியால்
ஊமையனாய் நானும்
கதைப்பவர்களாய்  அவர்களும்....
பேருந்து இரைச்சலோடு தனது இலக்கு நோக்கி...
என்னை செவிடாக்கியபடி

- சு.மு.அகமது
Add new comment
 
என் காதலை தொழுவேன் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
தமிழீழநாதன் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 21 ஜூன் 2010 00:00
என் காதலை தொழுவேன்
உச்சிவான் தொட்டு
வெள்ளமாய் கொட்டும்
வெள்ளை அருவியின்
ஒற்றை துளிநீரின் பிறப்பிடம்.

மண்மூடிய விதைக்குள்
மரணம் அடையாமல்
உயிர் கொடிபூக்க
ஒளித்து வைத்த காற்று.

இவைகளும் கூட
என்னவளின் காதல்போல்
என்றும் ரகசியமாய்.

ஒருமுறை விடியலுக்கான
உயிர்வாழும் புற்றீசலாய்...
எட்டுநாளுக்கு வாழ்க்கைக்கு
பட்டில் கூடுகட்டும்
பட்டுபூச்சியாய்...
என்வாழ்வும் அவளின்
ஒற்றை காதலுக்காக
உயிர்தாங்கி நிற்கின்றது.

முகம்காட்ட மருத்த குயில்
மூங்கில் காட்டிற்க்குள்
சுரம்சொல்லி பாடும்.
முகம்காணா என்னவளின்
முழுதான காதல்
உயிராக என்னுள் வாழும்.

கைசாத்து இடாத
கருத்தொற்றுமை பத்திரம்
அவளின் காதல்.
இன்பத்தை இடைவிடாது
தருகிற அட்சயபாத்திரம்
அவளின் நேசம்.

அசுத்த காற்றை கூட
புல்லாங்குழல் செலுத்தி
இதமான ராகம்பாடும்
வித்துவானாய் என்காதல்
எந்தன் குறைதீர்க்கும்
என் காதலி.

அவளின் நினைவுகள்
பாலைவன கால்தடமாய் அல்ல
பல்லவனின் கல்வெட்டாய்
பசுமையாய்
வலிமையாய் என்றும்
என்னுள்.

கற்றை புயலை எதிர்க்கும்
ஒற்றை இலையாய்
துடிதுடித்து போகும்
எந்தன் இதயம்
அவள் எனை கோபிக்கும்
அந்த நொடியில்.

மெல்லிய மொட்டு
சட்டென மலரும் அந்த
ஒற்றை நொடியைப்போல.
ஆர்பறிக்கும் அலைகடல் நடுவில்
அமர்ந்து இருக்கும் அமைதியைபோல்.
அவளோடுபேசும் அந்தவினாடி
ஆண்டவனால் அருளப்பட்டது.

எனக்கு தெரியல
அவள் எனக்கு கிடைப்பாளா ?
இல்லையா என்று.

கடவுளின் முகம்பார்க்காமல்
காலம் எல்லாம் தொழும்
பக்தனைபோல,
என்னவளையும் என்காதலையும்
என்றும் தொழுவேன்

- தமிழீழநாதன்
Add new comment
 
விதி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
முத்து கருப்புசாமி ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 19 ஜூன் 2010 00:00



மழையின் மரணத்தை
சிறிதாவது நீடிக்க
ஒரு மரம் கூட
இல்லாப் பாலையில்
பெய்யும் மழையாய்...

ஒரு ஏழையின்
வயிற்றில் குடிபுகுந்த
புற்று நோய்
மருத்துவமனையை மட்டும்
வடிகட்டி
மரணத்திற்கு வழிகாட்டுகிறது!

- முத்து கருப்புசாமி

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • சொர்க்க வாசல்
  • முதிர் ஆண்
  • கடுதாசி
  • நீ... நான்... காதல்...
  • ரகசிய காதலியே
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 9 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.