• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
பரம்பரை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
அமானுஷ்யன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2010 00:00
பரம்பரை
ஆற்றுக்குத் தெரியுமா
ஆற்றைக் கடக்க
பயப்படுகிறேன் என்று.
இறங்கினால்
சங்கமமாகும் இடத்தில் என்னையும்
சேர்த்திடுமென்று பயம்.
அப்படித்தான்
என் பாட்டனும் என் சித்தப்பனும்
என் பாட்டி சொன்னது
நினைவிலிருந்தும்
துணிச்சலுடன் இறங்க
தொண்டைக்குழி தட்டியபோது
கேட்காமலேயே
கைகள் முன்னே சென்று நீரை அழுத்தி
உடலை மேல் கொணர்ந்தேன்.
நீர் சென்று வயிறு உப்பி
மூச்சு முட்டியது.
முடிவு தெரியும் நிலையில்
பாட்டி
தம்பியிடம் சொல்லக்கூடும்.

- அமானுஷ்யன்
Add new comment
 
கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
ஜெயந்த் கிருஷ்ணா ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 01 ஜூலை 2010 00:00
நமக்கு என்ன மரியாதை
மானே என்றேன்!
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.

கண்ணே என்றேன்
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.

நீயின்றி நானில்லை என்றேன்
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.

என் உலகமே நீதான் என்றேன்
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை

அழகாய் இருக்கிறாய் என்றேன்
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை

என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....

இதுக்கும் மேல அங்க நின்னா
நமக்கு என்ன மரியாதை?
- ஜெயந்த் கிருஷ்ணா
Add new comment
 
காணி நிலம் வேண்டும் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சி.சுப்ரமணிய பாரதியார் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 30 ஜூன் 2010 00:00
காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

- சி.சுப்ரமணிய பாரதியார்
Add new comment
 
மெல்லினம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
புதுவை பாமல்லன் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 28 ஜூன் 2010 00:00
மெல்லினம்

மெல்லிய மரணம் அரங்கேறும்
மெளன இலக்கிய மன்றம் - காதல்
சத்தமின்றி நிகழுமோர் யுத்தகாண்டம்
சத்தியத்தில் சங்கமிக்கும் உறவுகோலம் - அது
நித்தியத்தில் உறுவாகும் சாமவேதம்
முக்தியினை முன்காட்டும் முழுமைகீதம்

விழிவழி வருதா காதல்
மொழி வழி தருவதா
விழைவு தனில் நுழைவதா
விந்தை நகையினில் மலர்வதா
விழும் சிந்தையில் சிறப்பதா
விளங்காப் பொருளில் புலர்வதா
விளையும் பொழுதே உனையறி
வீழாதென்றும் உண்மைக் காதல்

- புதுவை பாமல்லன்
Add new comment
 
இரவல் இரவுகள் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 25 ஜூன் 2010 00:00
இரவல்  இரவுகள்
எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!

இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம்,  என் உணவு,
என் பாவனைகளில்
நான் தோற்றுப்போனதே
கிடையாது!

எல்லா மகிழ்ச்சிகளும்,
வேதனைகளும்
பழக்கப்பட்டவைகளே!

தற்போதைய  நாட்களில்
என் பார்வைக்  குறைவு,
பசியின்மை, ரத்தக் கட்டிகள்,
மாத்திரைகள் உடலுக்குள்
செய்யும்  மாயஜாலம்,
யார் யாரோ வந்துபோகும்
ஆஸ்பத்திரி முதல்
மாடியின்    கிழக்கில்
என் திரை மூடிய அறை,

விரைவாய்ப் பரவும்
வேதியல் வாசம்,
தெர்மாஸ்  குடுவை
சுடுதண்ணீர், காபி,
உப்பில்லாதக் கூழ்,
இயற்கை  உபாதைக்கு
மறைவாய்ப் பாலிதீன் பை!

என் தலைமுறைகளின் 
உறக்கம், 
உணவு, 
மகிழ்ச்சி, 
சௌஹரியம்,
தற்காலிகமாய்-
என்னால்   தடைப்பட...

நிச்சயமாய் நான் இரவல்
இரவுகளில்  தவிக்கிறேன்!
என்பது மட்டுமே  உண்மை  -
மரணம்  வரும்
வரையில்!

நான் உறங்குவதுமில்லை,
விழிப்பதுமில்லை!
- எழிலி
Add new comment
 
நீ அழுக்கான அழகி... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சீமான்கனி ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 24 ஜூன் 2010 00:00
நீ அழுக்கான அழகி...
இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட  அழ(ழுக்)கையெல்லாம்  
குடித்துவிட்டு நாள் முழுதும் என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது.

உன் அழகு தாக்கிய குளியலறை
கதறுகிறது கடவுளிடம் என்னை ஏன்
கல்லாய் படைத்தாய் என்று.

தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!

பொதிகையிலிருந்து புறப்படும்
தென்றல் என்பதெல்லாம் பொய் ;
குளித்து விட்டு நீ முடி உலர்த்தும்
சாரலில்லிருந்து புறப்படும் என்பதே மெய்.

நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து  விடுகிறேன்.

குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி.

- சீமான்கனி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • ஊமையரின் கதையாடல்
  • என் காதலை தொழுவேன்
  • விதி
  • சொர்க்க வாசல்
  • முதிர் ஆண்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 8 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.