• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
மழலையின் மொழியில் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2010 00:00
மழலையின் மொழியில்
அப்பாவின் ஞாபகம்
வரும்போதெல்லாம்

அலமாரியில் இருக்கும்
இதைத்தான்
அடையாளம் காட்டுவாள்
அம்மா!

வெளிநாட்டிலிருக்கும்
அப்பாவுக்கு - என்
ஏக்கத்தின் 
அடையாளமாக
எதை?...

தொலை பேசியில்
முகம் தெரியும்
நூதன கண்டுபிடிப்பு
வந்து விட்டதாமே!

உள்ளம் தெரியும்
உணர்வைச்சொல்லும்
கருவி வந்துவிட்டதா?

கேலிப் பேசும் என்
பள்ளிப் பிள்ளைகளின்
கேள்விக்குப் பதிலாய்
அப்பாவிடமிருந்து  எப்பொழுது?
- எழிலி
Add new comment
 
கல்லும் முள்ளும்... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
விக்னேஷ் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 00:00
கல்லும் முள்ளும்...விக்னேஷ்

மூஞ்சூட்டை ஒடிச்சு பல்லுகுத்தி,
கற்றாளை, கல்லு முள்ளு பாத்து நடந்து,
பின்னக்கா பொறுக்க போன மவ
பொழுது சாயுமுன்னே வந்து சேருவாளா ?

சருகுக்கு இடையில சர்ப்பம் இருக்கும்,
விஷமுள்ளு வழியில விழுந்து கெடக்கும்,
குப்பிச் சில்லு குத்திப் பிச்சும்,
வெளிச்சம் கெடுமுன்னே வந்து சேருவாளா ?

களவாணிப் பயலுவ அங்கங்கே நிப்பினும்,
இருட்டுக்குள்ள குடிச்சோண்டு விழுந்து கெடப்பினும்,
ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன செய்வேன்
சமஞ்ச புள்ள சாயங்காலம் வந்து சேருவாளா ?

முந்தியில மனசைக் கட்டி,
வயிற்றில நெருப்பக் கட்டி,
கும்பி கிடுகிடுங்க கிடந்து பொகயுறேன்...
நாளைலேருந்து போகவேண்டாம்ன்னு சொல்லணும்,
வேற வேல பாக்கலாம்ன்னு சொல்லிப் பாக்கணும்.

சர்வ காலமும் இது தான் நெனப்பு...
ஆனாலும் விடிஞ்சதும் தட்டி எழுப்பி
அனுப்பி வைக்கற பொழப்பு...
இடுப்பொடிஞ்ச கெளவி நான்...
அடுப்பொிக்க எங்க போவேன்.

- விக்னேஷ்
Add new comment
 
ஒத்துண்ணல் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 14 ஜூலை 2010 00:00
ஒத்துண்ணல்

இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்
Add new comment
 
சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
மன்னார் அமுதன் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 12 ஜூலை 2010 00:00
 சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை
காற்றுப் புக மூக்கினிற்குக் கருணை காட்டுங்கள் - என்று
கையைக்கட்டி வாழுமினம் நாங்களுமில்லை

சமர்ப்பணங்கள் எமக்களித்த பண்டிதர் பலர்
சன்மானம் கிடைத்தவுடன் ஓடி விட்டனர்
அமர்க்களமாய் வாழ்ந்த வாழ்வை புறக்கணித்தவர்
சமர்க்களத்தில் மாண்ட நாளை மறந்துவிடவோ

பூக்கொடுத்துக் கைகுலுக்க எமக்கும் சம்மதம்
புறமுதுகில் குத்திவிட்டால் யார்க்குப் பாதகம்
ஆண்டுகளாய் ஆண்ட இனம் அழிந்து போகையில்
ஆடு கண்டு கவலைப்படும் நரியை நம்பவோ

சொத்து சுகம் தேடி இங்கு வந்த மாக்களே
பத்து ரூபாய் பெற்றுக்கொண்டு காட்டிக் கொடுத்தனர்
வெற்றிடங்கள் விளைநிலங்கள் கூறு போட்டனர்
வீண்நிலங்கள் என்று கூறி விற்றுத் தின்றனர்

ஆலும் வேலும் நிறைந்த மண்ணில் போதி நட்டனர்
போதி நன்றாய் தழைப்பதற்கெம் இரத்தம் விட்டனர்
தழைத்த போதி வேரைத் தேடிக் கல்லை வைத்தனர்
இளைத்த இன‌த்தின் மீது ஏறிக் குலவை இட்டனர்

உலகிலொரு மூலையிலே எனக்கும் நிலமுண்டு
உரிமை முழங்கும் கவிகளுக்கு என்றும் உயிருண்டு
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை

- மன்னார் அமுதன்
Comments (1)
 
உன்னைக் காதலிக்கிறேன்... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
இனியா ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 09 ஜூலை 2010 00:00
அணைக்கும் உரிமையை
உனக்கே தந்து விட்டேன்- இன்று
அடிக்கும் உரிமையை மட்டும்
எடுத்துக்கொண்டாய் முதன் முறையாய்.

கொஞ்சலும் செல்லக் கில்லலும் மட்டுமே
அறிந்த என் கன்னங்கள்
பெரிய பொக்கிஷங்கள் தான்- உன்
ரேகைகள் பதிந்தது அங்கு மட்டும்தானே...

என் தோள் பற்றி உலுக்கி
நீ திட்டிய நேரத்தில் தான்
உன் மூச்சுக் காற்றின்
அருகாமையை உணர்ந்தேன் நான்.

என் உயிர்வரை சென்று
வேர் அறுக்கும் வலிகொண்டவை
என்னை வெறுத்து ஒதுக்கும்
உன் மௌன மொழிகள்..

சுடவில்லை உன் தீச்சொற்கள்,
அந்தத் தருணத்திலேனும்
என் முகம் பார்த்த
உன் விழிகளை ரசித்தேன்..

காதல் பித்துதான் எனக்கு
மணமான நாள் முதலாய்,
நீயல்லாத விஷயம் பற்றி
யோசிப்பதே இல்லை நான்.

பார்த்துப் பார்த்து அலங்கரித்தேன்,
வீடும் மின்னியது கண்ணாடியாய்...
என்னைப் போல் அதுவும்
உன் பார்வையை எட்டவில்லை.

பலவித பதார்த்தங்கள்
உனக்காய்ப் படைத்தேன்...
என் பேச்சு போல் அவையும்
உனக்கு ருசிக்கவில்லை.

என் காதல் சொல்ல
எனக்குத் துணிவும் இல்லை,
அதை உணரும் பிரியம்
உன் உள்ளத்திலும் இல்லை.

பயமறியா இளங்கன்றாய்ச்
சுற்றித் திரிந்த என்னை
உன் வேளிக்குள் அடைத்தாய்,
அசைவின்றி முடக்கினாய்..

தாய் தேடும் குழந்தையாய்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்;
நீர் தேடும் வேராய்
உன் காதல் வேண்டுகிறேன்.

சுற்றமும் நட்பும் இல்லாத
தனிமை என்னைக் கொல்கிறது,
என்னை வெறுக்கும் உயிரானாலும்
என்னருகில் நீ வேண்டும்..

உன் அன்பைப் பெற்றுவிட எண்ணி
என்னையே தொலைத்துவிட்டேன்-அர்த்தநாரியாய்
உன் மனதோடு கலக்க நினைத்து
என் உயிரில் பாதியை இழந்துவிட்டேன்..

ஓர் உயிராய் என்னை
என்றேனும் உணர்வாய் என்றே
உயிர் பிடித்து வைத்திருக்கிறேன்...
உனக்காய்க் காத்திருக்கிறேன்.

சிரிக்க மறந்தேன்; எதையும்
ரசிக்க மறந்தேன் - உன்னால்
வாழவும் மறந்து கொண்டிருக்கிறேன்,
இருந்தும் உன்னைக் காதலிக்கிறேன்..
இறந்தும் உன்னைக் காதலிப்பேன்..

- இனியா
Comments (1)
 
இப்படியும் ஒரு சமாளிப்பு அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 00:00
இப்படியும்  ஒரு சமாளிப்பு
எனக்கு  இப்பொழுது
மூன்று  வயதாயிருக்கலாம்!               

அப்பா எங்கே  என்று                            
அம்மாவைக் கேட்டால்,

தப்பாமல்  இந்தப்
பொம்மையைக்
காண்பிப்பாள்!

அவர்  நினைவாய்
எனக்கு
இதுவென்றால்,   
என் நினைவை
எதைக் கொண்டு
அவரிடம் உறுதி
செய்வாள்?

கண்ணீர்  தோய்ந்த
தன் புடவைத் தலைப்பால்
என் முகந்துடைப்பாள்!

எங்கோ இருப்பதாய்
ஒப்புக்குச் சொல்லி வைப்பாள்!

எப்போ வரும் எனக்
கேட்டால் -
என் உச்சி முகர்ந்து
தலையைத் தடவுவாள்!

சாமிக்குத்தான் தெரியும்
அம்மாவின் சங்கடமும்
சமாளிப்பும்!

எப்படியும்  ஒருநாள்
அப்பா வரும்!

- எழிலி
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • வலி தந்த வழி...
  • ஆள்காட்டி
  • என் செல்லமே
  • பரம்பரை
  • கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது...
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 7 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.