• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
முதலைக் கண்ணீர் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
பாலக்குமாரன் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 13 மே 2009 00:00

 முதலைக் கண்ணீர்

மரம் செடி இலைகள் போல
மண் வாழும் உயிர்கள் போல
மூச்சுவிடத் தெரிந்த முதலை
நீருக்குள் எதற்காய் போச்சு
கூடுகள் குகைகள் இன்றி
நீரடியில் உறங்கலாச்சு.

நரிக்குகையில் சிங்கம் மோதும்
குயில் முட்டை காக்கைக் கூட்டில்,
காக்கைகள்? மனிதர் வீட்டில்
புற்றுமண்ணில் எறும்பு கட்ட
பாம்புக்கு அதுவே கட்டில்
உன் சுவர் எனது வீட்டில்
என் கலப்பை உனது வரம்பில்
அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும்
எண்ணமே முதலைக்கில்லை.

 நீரடி எல்லாம் இங்கே
பூமித்தாய் கருப்பைப் போல
எல்லைகள் இல்லா தேசம்
திசைகூட அழியும் ஆங்கே
மனிதர்கள் பிரித்துப் போட்ட
நிலம் பார்த்து சோகத்தோடு
அழுவதே முதலைக் கண்ணீர்
தெரிந்தபின் குறை சொல்லாதீர்.

- பாலக்குமாரன்

Add new comment
 
மரங்களில் நான் ஏழை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
மு மேத்தா ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 11 மே 2009 00:00

வாழை

 

மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
மற்ற மரமெல்லாம் வேர்த்து வேர்த்து
மனப் புழுக்கத்தின் குலுங்கல் - அதில்
வந்து கனிந்தவை பழங்கள்!

பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
பழங்களினால் உலகில்
பாக்கிஸ்தானில் நடந்தது போல
பாகப் பிரிவிணை நடக்கும்

புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
புரட்சிப் பழங்களினால்
புண் வயிறு சிரிக்கும்
பொலிவிழந்த உடல் செழிக்கும்

மறுபடியும் உழைப்பதற்குப்
புதுவலிமை பிறக்கும் 

சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
சிங்காரம் செய்வதற்குப் பூச்சாரங்கள் தொடுக்கும்
பாவடைக் காரிகளின் நளின விரலோடு
பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!

அந்த நார்கள்
என்னுடைய
உடை உரிப்புக்கள்
சத்தம் போடதா
சதைக் கிழிசல்கள்!

பூவைப் போல் உயர் பிறப்பு
இல்லாத நாரை
பூக்களுடன் சேர்த்து வைத்துச்
சம மரியாதை
வாங்கித் தந்ததென்
சுய மரியாதை!

என் மட்டைச் சட்டையோடு
சேர்ந்த நாசிக்குச்
சுறுசுறுப்புக் கொடுக்கும்
மூக்குப் பொடியின்
தூக்குத் தூக்கி!

புகையிலைத் தூளின்
பொட்டலப் பெட்டகம்!

மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை 

- மு மேத்தா("வாழை மரத்தின் சபதம்")

Add new comment
 
வீழ்ச்சி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சு. வில்வரெத்தினம் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 09 மே 2009 00:00


என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை

மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.

மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.

வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?

வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.

குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.

தின வடங்கிற்றா?

தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?

மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.

அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.

படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்

கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
"யானோ அரசன்? யானே கள்வன்."

- சு. வில்வரெத்தினம்

Add new comment
 
காதலித்துப் பார்! அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
வைரமுத்து ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 08 மே 2009 00:00

 காதலித்துப் பார்

 காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

-வைரமுத்து

Add new comment
 
குழந்தைச் சிரிப்பு அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எட்வின் பிரிட்டோ ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 07 மே 2009 00:00

 குழந்தைச் சிரிப்பு

அந்த குட்டிப் பெண்ணின்
சிரிப்பில் அப்படி என்னத்தான்
இருக்கிறதோ தெரியவில்லை

கொள்ளைக் கொள்ளையாய்
அவள் வெள்ளைச் சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொள்ளையடித்துக்
கொண்டு போய்விட்டாள்

அவள் ஒவ்வொரு முறை
மலர்ந்த போதும் என் மனதில்
ஈரமாய் ஒன்றிரண்டு பனித்துளிகள்

 அவள் வாய் நிறையச் சிரிக்கும்போதுதான்
மகிழ்ந்திருத்தலின் மகத்துவம் புரிகிறது

என்னச் செய்வது...? கேட்கும்போதெல்லாம்
பூ பூத்துச் சொரிய சிலருக்கு மட்டும்தான்
வாய்த்திருக்கிறது!

ஒவ்வொரு புன்னகையின்
முடிவிலும் நான்தான்
உடைந்துபோனேன்

அந்த நொடி அப்படியே
உறையாதா என்ற
எதிர்பார்ப்பிலும்...

மீண்டும் அந்த நாட்கள்
எனக்கும் வாய்க்காதா
என்ற ஏக்கத்திலும்...

- எட்வின் பிரிட்டோ

Add new comment
 
மேன்மை மிகு தேசமே அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கான் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 06 மே 2009 00:00

 

 புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்

 மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
.

அது எழவே செய்யும்.

- பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கான்

(மொழிபெயர்ப்பு எம். ஏ. நுஃமான்)

Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • பக்கத்து வீடு
  • ஆனந்த அருவி
  • குருவிக் கூடு
  • நேற்றின் எச்சில்
  • நிரந்தர நிழல்கள்
« தொடக்கம்முன்51525354555657585960அடுத்ததுமுடிவு »

பக்கம் 56 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.