• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • யான் வழிபடும் தெய்வம்

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
மின்னல் விழுதுகள்! அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ரசிகன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 24 ஜூலை 2010 00:00
மின்னல் விழுதுகள்
ஒரு மஞ்சள் பூசிய
மாலை வேளை சந்திப்பில்...
வெள்ளுடை விலாவரியாய்...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்ததவையும்!
பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடி சாய விழைந்தபடி நான்!
இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம்...
சலித்துப்போயிருந்தன
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்...
ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
விரசங்கள்
வீரியம் காட்டிடவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்...
நிஜத்தை மறந்துவிட்ட நினைப்பில்
வந்தவள் என் பக்கம் வந்து
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!

- ரசிகன்
Add new comment
 
என் பெயர்... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
இனியா ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2010 00:00
என் பெயர்

சற்றும் அடங்காத
சாலை அது - என்
இருப்பு அங்கே
யாரையும் கலைக்காமல்,
தினமும் வரும் வழக்கமாய்
நடைபாதையில் நான்,
நினைவுகள் மட்டும்
எங்கோ தூரமாய்...
அங்கே ரசித்தவை
பழங்கதைகள் ஆகின
என் கண்கள் அலைபயும்
பழைய முகங்கள் தேடி
அன்று நாம் நின்ற இடத்தில்
இன்று நான் மட்டும் தனிமையில்...

நீ என்னோடு இருந்த போதும்
நானாக மட்டுமே நான் இருந்தேன்,
தனியே என்னை விலக்கிய போதும்
துளி மாற்றம் இல்லை என்னுள்.
இருந்தும் பிறரிடம் சிறு மாற்றம்...
நாமாய் இருக்கையில் 'மணி' என்றவர்
இன்று எனை அழைக்கும் பெயர் 'தெருநாய்'!

- இனியா
Add new comment
 
கோரமுகம் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
ப.மதியழகன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 22 ஜூலை 2010 00:00
கோரமுகம்

பொம்மை விளையாட்டு
காதல் விளையாட்டு
வியாபார விளையாட்டு
மது விளையாட்டு
மங்கை விளையாட்டு
மழலை விளையாட்டு – என
ஏதேனும் ஒரு போதை
எந்நாளும் தேவைப்படுகிறது
வாழ்க்கையின் கோரமுகத்தைக்
காணச் சகிக்காமல்
முகம் புதைத்துக் கொள்வதற்கு.

- ப.மதியழகன்
Add new comment
 
உரிமை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
புகழேந்தி ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 21 ஜூலை 2010 00:00
உரிமை
தெரு விளக்கிற்கும்
உன் மேல் ஆசையடி
உன்னை கண்டதும்
விளக்கனைத்தது - தன்னை
தவிர யாரும் -உன்னை
பார்த்துவிடக் கூடாது
என்பதற்காக!

- புகழேந்தி
Add new comment
 
உன்னையே நினைப்பதனால்... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
நித்தியசார்லஸ் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 19 ஜூலை 2010 00:00
உன்னையே நினைப்பதனால்...
நேரத்தைதிருடும்
நினைவுகளை
தண்டிக்கமுடிவதில்லை.
எல்லாநாளும்
ஒருநாள்போல
இருக்காதென்கிறார்கள்
உன்னையே நினைப்பதனால்
எனக்குமட்டும்
எல்லாநாளும்
ஒருநாள்போலவே இருக்கின்றன
நீ பிரிந்து
போனதாலே
நான்மட்டும்
சிக்கிக்கொண்டேன்
உன்காதலிடம்.
இனி எந்தப்பெண்ணையும்
பார்க்கமுடியாதபடி.

- நித்தியசார்லஸ்
Add new comment
 
வாய்ப்பாடு அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
தணிகை அரசு ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 17 ஜூலை 2010 00:00
வாய்ப்பாடு


கடுகைக் கதையாக்கி
நிழலை நிஐமாக்கி
ஊதிப் பெரிதாக்கி
உறவைக் கெடுத்த உத்தமர்களே !

முகமலரச் சிரித்துவிட்டு
முள்ளால் சொல் செய்து
முதுகில் குத்திய
முன்னாள் தோழர்களே !

நாவுக்கு நரம்பும்
வாந்திக்கு வரம்பும்
நெஞ்சுக்கு ஈரமும்
கோழைக்கு வீரமும்
இல்லை என்று நினைவூட்டி
ஈடற்ற நன்மை செய்தீர்.

என் பேனா செதுக்கிய பேரழகியோ
எங்கு போனாள் என்றே தெரியவில்லை.

தானே வந்தாள்
ஒரு நாள் அருகில்
தவித்தாள் தாங்கினேன்
அழுதாள் தேற்றினேன்
நானோ இன்று
நிற்கிறேன் தெருவில்

விழித்துக்கொள்வீர் !
வாழ்வில் நம்பிக்கெட்டோர்க்கு
வாய்ப்பாடு நான்

- தணிகை அரசு
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • மழலையின் மொழியில்
  • கல்லும் முள்ளும்...
  • ஒத்துண்ணல்
  • சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்...
  • உன்னைக் காதலிக்கிறேன்...
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 6 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.