• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • சின்ன சின்ன ஆசைகள்...

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

கவிதை இதழ்
தாயின் மடி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
நந்தினி நீலன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2010 00:00
தாயின் மடி
தேனிசை தென்றலின்
மழைச்சாரலில்

கூவும் குயில்களின்
இனிய இராகத்தில்

குதித்தோடும் அருவிகளின்
ஓசைதனில்

கொஞ்சும் கிளிகளின்
பேச்சினில்

ஓயாமல் பொங்கும்
அலைகளில்

ஆழியில் நீந்திமகிழும்
வண்ணமீன்களில்

அசைந்தாடும் மயில்களின்
அழகினில்

ஓசையிடும் சோலைகளின்
கீதந்தனில்

காணும் இன்பத்தை விட
அதிக இன்பம்
கொடுத்து மகிழ்ச்சியளிப்பது
தாயின் மடியே!

- நந்தினி நீலன்
Add new comment
 
கற்பென்பது.... அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சு.மு.அகமது ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2010 00:00
கற்பென்பது....
சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று

பேரலையின் ஆரவாரம்

தலையாட்டும் பெருந்தருவின்
எதிர்வினை செயலற்றுப்போய்
மென்னியம் உதிக்கிறது

படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்

ஆரம்பம் இப்படித்தான்...

புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க  புசியப் பழகினதாய் ..

சுவைத்துப் பழகினவை

செறித்துப் போனதால்
திளைத்துப் போகும்
அதன் உலைகள்

தெறிக்கும் துளிகளில்
நான் பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு

விந்தையின் மேலணியில்
நான் கற்றேன்  நீ கற்பித்தாய்
'கற்ப'து’ பொதுவானது

- சு.மு.அகமது
Add new comment
 
நீ நனைந்த மழை துளிகள் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
முகவை சகா ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 00:00
மழைத்துளி
மாலை மழைக்கு
நனைந்துவிட வேண்டாம்
என நீ ஓடினாய்
மழையும் விடாமல் துரத்தி
அணைத்தது உன்னை

முதல் துளி உன் மீதும்
மறு துளி மண் மீதும் விழுந்தது
உன் மீது விழுந்த
மழைத்துளி சிலிர்த்தது
மண் மீது விழுந்த
மழைத்துளி மறித்தது

பனி பிரதேசத்தில் கூட
பார்க்கும் வரம் கிடைக்குமா தெரியாது
உன் போன்ற பனிப்பாறை
மழையில் நனைவதை

உன்னைவிட உன் ஆடைக்கு தான்
குளிர் அதிகம் போல
உன்னை இறுக்கி அணைத்தது

மரத்தின் அடியில் ஒளிந்துகொண்டாய்
மரத்தில் பட்ட துளிகளெல்லாம்
மண்மேல் விழாமல் உன் மேல் விழுந்தது

இன்று உன் குடைக்கு விடுமுறை
அதே போல உன்னை ரசித்து நடந்த
என் நடைக்கும் விடுமுறை

உன்னையே நீ இறுக்கி கட்டி கொண்டாய்
ஒருசில நிமிடம் உன் இறுக்கத்தின் இடையில்
இருப்பதாய்  உணர்ந்தேன்

குளிரில் சிலிர்த்தாய்
என் பாவங்களும் சாபங்களும்
புண்ணியமானது !

தயவு செய்து நீ நனைந்ததை
நினைத்து வருந்தாதே!
உன்மேல் விழுந்த எத்தனையோ
துளிகளை நனைத்துவிட்டாய்
அதுதான் உண்மை!

- முகவை சகா
Add new comment
 
இப்போது அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சித. அருணாசலம் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 09 ஆகஸ்ட் 2010 00:00
இப்போது
காதல் வயப்பட்டால்
முள்ளும் மலராகும்
என்றதை மறுத்தேன்.

காதல் வயப்பட்டால்
கண்கள் குருடென்பதை
உணர்வுகள்
ஒத்துக் கொள்ள மறுத்தது.

காதலில் காலத்தைக்
கழிப்பவனைக்
கவலைகள் தொட்டுப் பார்க்காது,
உண்மை அதுவல்ல என்று
உரைத்தது மனது.

காதலைச் சொல்லிப்
பழக்கப்பட்டால்
வார்த்தைகளில் வாசம் வீசும்
என்பதெல்லாம்
ஒதுக்கப்பட வேண்டிய
கற்பனை என்றேன்.

காதலுக்காகச் சொன்னதையெல்லாம்
எப்போதும் மறுத்தவன்,
இப்போது மறுக்கிறேன்,
முதலில் மறுத்ததை.

- சித. அருணாசலம்
Add new comment
 
மாக்கோலம் பூக்கோலம்... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சீமான்கனி ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 06 ஆகஸ்ட் 2010 00:00
மாக்கோலம் பூக்கோலம்...

வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம
வானமே உன்வாசல்வர
வசியம் போட்டு வரஞ்சுவச்ச
வரிசைக்கோலம் நெனவிருக்கா!!?

நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க  ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?.

பிறைநிலாவ பிச்சுவந்து
கிள்ளி கிள்ளி அத எடுத்து
வாசலிலே நீர்தெளிச்சு
நீ போட்ட வாழ்த்துகோலம்
நெனவிருக்கா!!??

வீட்டு  முற்றத்தில்  குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.

மருதாணி அரைச்சு
மல்லிகை  கையில்  கோலம் போட்டு
அழகா இருக்கானு அடுத்தநாளு கேக்கையில
இருட்டுல  இலுவிவிட்ட இந்த கோலம் அழகுன்னு
கண்ணாடி காட்டி கண்ணடிச்சது நெனவிருக்கா!!?.

ஆத்தா கிட்ட அடிவாங்கி
'யப்பே...'ன்னு அழுகையில
கண்ணத்த கடந்துவந்து
கண்ணீர் போட்ட நீர் கோலம்
கடவாயில்  உப்பு கரிச்சது
கண்ணே  நெனவிருக்கா!!?.

கைவிரல் நடனமாட
கைவளவி தாளம்போட
கலர்கலரா மாவெடுத்து
கச்சிதமா கோலம்போட்டு  
கண்மூடி கனாகண்ட
காதலான எழுப்பிவிட்டு
கதவோரம்  வந்துநின்னு  
கண்ணாடிக்க,
கொலுச பேசவிட்டு
கோபப்பட்ட நெனவிருக்கா!!?.

கார்த்திகை மாசத்து
தீபத்துல   திரியவச்சு
தெருவெல்லாம்
தினறவச்சு நீ போட்ட
தீக்கோலம் நெனவிருக்கா!!?.

எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு  நீபோக - உன்
தலையயேரிய   மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.

வண்டியுருக்கு வாக்கப்பட்டு வண்டியிலே  நீபோக
வகைவகையா கோலம்பார்த்த என் வீட்டு வாசப்படி
வாழவெட்டியா வழியத்து கெடக்குமுன்னு
வஞ்சியே  நெனவிருக்கா!!?.


- சீமான்கனி
Add new comment
 
உயிரின் வலி அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
எஸ் வைத்தீஸ்வரன் ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 05 ஆகஸ்ட் 2010 00:00
உயிரின் வலி
இடி இடிக்கிறது
பாலத்தின் மேல், இடையிடையில்
ரயிலோட்டத்தால்

அதனடியில்
இரும்பை நீட்டி வளைத்து
தீப்பொறி பரக்க ஓலமிடும்
வெல்டிங் கடைகள்,
படை வரிசை போல்.

அதை யொட்டிய வளைவில்
அரைத்து மாளாமல்
அலறுகிற மாவு யந்திரங்கள்
இவை நடுவில்,
உடம்புக் கடையில் தொங்கும்
ஊதிகள் பலூன்கள்
பூனை நாய், பொம்மைகள்
கூச்சலிட, புழுதியில்
பிழைப்புக்கு நகரும்
மனிதக் கால்கள் ஆயிரம்.
ஈதத்தனைக்கும் அடியில்
இரண்டு முழக்கந்தலுக்குள்
சுருண்டு முனகுகிறானே
நிஜமாக ஒரு மனிதன்,
அவல் ஈன ஒலிகள்
அபோதும் விழக்கூடும்,
ஏதாவது காதுகளில் ?
ஏற்கெனவே
எறும்பு மொய்க்கத்
தொடங்கிவிட்டது,
அவன் வாய் முனையில்...
- எஸ் வைத்தீஸ்வரன்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • அமரர்.அருள் மா.இராஜேந்திரன் - கவிதாஞ்சலி
  • சில முற்றுப் புள்ளிகள்
  • முதிர் இளைஞா...
  • வாராமைக்கு அழிதல்
  • இரு பக்கங்கள்
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 4 மொத்த பக்கங்கள் 60

தேடுக

பகிர்ந்து கொள்ள

  • del.icio.us: orukavithai
  • Facebook: profile.php?id=100000149456257
  • FeedBurner: orukavithai
  • Google Reader: orukavithai

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.