| நல்லதோர் வீணைசெய்தே |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சி.சுப்ரமணிய பாரதியார் ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? - சி.சுப்ரமணிய பாரதியார்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


