| காதலுடன் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| உமா ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() பழகிய நாட்களின் இன்பங்களும் ,
பிரிந்த நாட்களின் துன்பங்களும் , என் நாட் குறிபேட்டில் நிரம்பி உள்ளதோ இல்லையோ என் தனிமை நீள்கிறது நீயும் வந்து நிரப்பாமல்... என் ரத்த நாளங்களில் எல்லாம் உன் நியாபக சுனாமி பிரதிபலிப்பாய் , சுழல் காற்றில் சிக்கிய ஒற்றை இலையாய் நான் மாலை நேர நம் முதற் சந்திப்பில் சாலை ஓர பூங்கா நாற்காலியின் ஒரு முனையில் நீயும் , மறு முனையில் நானும் அமர மஞ்சள் வெயில் பட்டு கூசிய என் கண் பார்த்து உன் நிழலில் அமர சொல்லி என் அருகில் அமர்ந்து கரம் பிடித்தாய் அருகில் இருந்த தருணம் உனக்காய் நானும் , எனக்காய் நீயும் என்று கூறி விட்டு தனியே இன்று வாழ்ந்து பார்கையில் தான் வலிக்கிறது செல்லாத காரணங்களை எல்லாம் காரணம் சொல்லி ,சொல்லி விட்டு கொடுக்கப்பட்ட நம் காதலை , காதலுடன் , காதலுக்காக விற்று கொடுத்து விட்டதாய் புலம்பும் என் மனம் இன்னும் கூட எங்கெங்கும் கை நீட்டுகிறது உன் நிழல் தேடி - உமா |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
meaning full feelings,
very nice presentation.
RSS feed for comments to this post.