| கற்பென்பது.... |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சு.மு.அகமது ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று பேரலையின் ஆரவாரம் தலையாட்டும் பெருந்தருவின் எதிர்வினை செயலற்றுப்போய் மென்னியம் உதிக்கிறது படர்வெளியில் விரல் பிடித்து நடை பழக்கும் வாசம் முத்தாத்தனின் மழிக்கப்படாத முகப்படிமச் சாயலில் ஆரம்பம் இப்படித்தான்... புசிக்கப் பழக்கின கனிகள் அழுகாதிருக்க புசியப் பழகினதாய் .. சுவைத்துப் பழகினவை செறித்துப் போனதால் திளைத்துப் போகும் அதன் உலைகள் தெறிக்கும் துளிகளில் நான் பெற்றது கையளவு உன்னுள் கலவாதது உலகளவு விந்தையின் மேலணியில் நான் கற்றேன் நீ கற்பித்தாய் 'கற்ப'து’ பொதுவானது - சு.மு.அகமது |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


