| கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது... |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| ஜெயந்த் கிருஷ்ணா ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 01 ஜூலை 2010 00:00 |
![]() மானே என்றேன்!
மானங்கெட்டவனே என்றாள் - மனம் தளரவில்லை. கண்ணே என்றேன் போடா கழுதை என்றாள் - நான் கலங்கவில்லை. நீயின்றி நானில்லை என்றேன் இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் - அவளை விட்டு நகரவில்லை. என் உலகமே நீதான் என்றேன் உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் - அவளை உதறவில்லை அழகாய் இருக்கிறாய் என்றேன் அடி வாங்கப் போகிறாய் என்றாள் - அவளை அலட்சியப் படுத்தவில்லை என் அகிலமும் நீ தான் என்றேன் சற்றும் யோசிக்காமல் அண்ணா ...என்றாள் பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்.... இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை?
- ஜெயந்த் கிருஷ்ணா
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


