| காணி நிலம் வேண்டும் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| சி.சுப்ரமணிய பாரதியார் ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 30 ஜூன் 2010 00:00 |
![]() காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்;-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டுதர வேணும்;-அந்தக் காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன் காவலுற வேணும்;என்தன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும். - சி.சுப்ரமணிய பாரதியார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


