| என் செல்லமே |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| மன்னார் அமுதன் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 03 ஜூலை 2010 00:00 |
![]() உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே - பிரிவின் தூரம் அறிந்தும் உன்னைத் துரத்தித் தேடுதே செல்லம் நிறை சொற்களாலே கொஞ்சும் ராசாத்தி - என்னைக் கனவில் கூடச் சுத்தி வரும் செல்வச் சீமாட்டி நட்சத்திரக் கண்கள் எந்தன் பகலை இரவாக்கும் - அகல நெற்றிநடுக் குங்குமச் சூரியன் பகலில் நிலவாகும் காதல் நிறை கண்களாலே கதைகள் உரைப்பாயே - அதனைக் கற்றுக் கொண்டு சீண்டயில்; அழகு காட்டிப் பழிப்பாயே நெடுநாள் பிரிவை உடனே போக்க விடுமுறை நாடுகிறேன் விடுப்புகள் முடிந்து வேலைக்கு மீள்கையில் நோய்நொடி தேடுகிறேன் புற்கள் நுனிப் பனித் துளி போல நானும் வருவேனே - எந்தன் பாசம் கொண்ட ரோசாவே நீ வாடிப் போகாதே - மன்னார் அமுதன்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


