| சொர்க்க வாசல் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| அனுபமா உதிவ் ஆல் எழுதப்பட்டது |
| வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2010 00:00 |
![]() ஆடுகின்ற பொம்மையினால் ஆட்டம்போடும் குழந்தை! ஆடாத தொட்டினிலே அழுதிடுமே குழந்தை! எறும்பில்லாப் புற்றினில் பாம்புகள் புகுந்துவிடும் பூசையில்லாக் கோவிலில் வௌவால்கள் குடியிருக்கும்! இடம்பெயர்ந்து போனால்தான் கடும்பாறை படிக்கட்டாம் அப்படியே இருந்தாலே நடத்தாலும் பிணந்தானே! நறுங்கிப்போன சிறுவண்டும் நறுந்தேனைத் தேடுதே! நல்லுறவைக் காணாது நெற்பறவை வாடுதே! காற்றுகூட புகுந்து மூங்கில் இசையாகுமே! கான மயில் இரைதேடி நீர்த் திசைபோகுமே! கருவாடு கடல்தேடி மீண்டும் திரும்புமா? இறந்து போன நிகழ்காலம் மீண்டும் அரும்புமா? சொர்க்க வாசல் கதவு ஒருமுறைதான் திறக்கும் திறந்த போது நுழைந்துகொண்டால் பல்லாயிரங்கள் பிறக்கும் அப்புறம் என்றால் ஆறுமாதம் ஆகும் இப்போதே வாழ்வாய்! இந்நிமிடம் வாழ்வாய்! - அனுபமா உதிவ் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


