| வீடு |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| கோகுல கண்ணன் ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 09 ஜூன் 2010 00:00 |
![]() என் சரணாலயத்தில்
அவ்வப்போது பறவைகள் குடிகொள்கின்றன பறவைக்கூடுகளால் ஆக்கப்பட்ட கூடென எத்தனை பெருமையெனக்கு அதிரும் வீடு இடையற்ற படபட சிறகடிப்பில் மொழிமீறிய தீராத உரையாடலில் பறவைகளின் அன்பளிப்பென சேமித்து வைக்கிறேன் கழன்றுவிழும் சிறகுகளை சிறகு முளைத்த நந்தவனமாய் பூத்துக்குலுங்கும் வீடு ஒரு நாள் பூமியின் ஈர்ப்பை இலகுவாய் உதறி காற்றின் கரம்பற்றி அந்தரவெளியில் தாவியேறும் நான் காத்திருக்கிறேன் பறவைகளின் முடிவற்ற கருணையில் உதிரும் அந்த ஒற்றைச் சிறகுக்காக - கோகுல கண்ணன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


