| அண்மைச் சுட்டு |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| எழிலி ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 05 ஜூன் 2010 00:00 |
![]() கண்ணீர்த் தீவுகளில், நம் தமிழர் இனம் தவிக்க - வெற்றுப் பேனா க்களில் அவர்களின் அவலத்தை நிரப்பி, இதழியல் படைப்பு! பரிதாபச் சொற்களில் வாய்ப் பந்தல் ! இன்னும் எத்தனை நாடகங்கள் அரங்கேற்றமோ? ஈழத் தமிழர் ரத்தம் குடித்து எத்தனை தல விருட்சங்கள் -அந்தத் தேசத்தில் தலை விரிய, பேசிக்கொண்டே, உறுமிக்கொண்டே, முழக்கமிட்டே, வீணே மேடைகள் விளம்பர ஊடகங்களாக, பாசாங்கு நட்பு. முற்றுப்பெறாத புள்ளிக் கோலங்களாய் தொடங்கிய இடத்திலேயே சிக்கலாகிப்போன நம் முயற்சி! விடியலுக்காக அவர்கள்- விழிகளில் இன்னமும் நம்பிக்கையைத் தேக்கிக்கொண்டு விரைந்திட வேண்டும் நம் தலைமுறைகள் மிச்சமுள்ளதே! - எழிலி |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


