• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



கவிதை இதழ்
பிடித்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!! அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
இளந்தமிழன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 19 மே 2012 00:00

 

இயற்கை பிடித்திருக்கிறது
அதில் செயற்கை பிடிக்கவில்லை!
நிலவு பிடித்திருக்கிறது
அதன் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவில்லை!
நட்சத்திரம் பிடித்திருக்கிறது
அதன் தூறம் பிடிக்கவில்லை!
மழை பிடித்திருக்கிறது
அதில் நனைய பிடிக்கவில்லை!
காதல் பிடித்திருக்கிறது
அதன் லீலை பிடிக்கவில்லை!
நட்பு பிடித்திருக்கிறது
அதன் தெளரகம் பிடிக்கவில்லை!

தனிமை பிடித்திருக்கிறது!
அதில் கனவு பிடித்திருக்கிறது!
கனவில் கற்பனை பிடித்திருக்கிறது
அதில் காதல் பிடித்திருக்கிறது!
காதலில் என்னை பிடித்திருக்கிறது!!!!!!

 

-இளந்தமிழன்

Tags:
  • இளந்தமிழன்
Add new comment
 
இலக்கிய வட்டத்தில் இருவரும் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
டாக்டர்.வ.க.கன்னியப்பன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 00:00

 

ஒருவரின் குரல் போல
மற்றவர்க்கு அமைவதில்லை;

ஒரு இசைக் கருவிபோல்
பிறிதொரு கருவி இசைப்பதில்லை;

ஒருவரின் குணம் போல்
இன்னொருவர் இருப்பதில்லை;

ஒரு எழுத்தாளர் போல்
மற்றொருவர் சிந்திப்பதில்லை;

சிந்தனையையும் ஒருவர் போல்
இன்னொருவர் வெளிப்படுத்துவதில்லை;

எழுத்தாளர்கள் கருத்துக்களுடன்
வாசகர்கள் கருத்துக்கள் ஒன்றாய் இருப்பதில்லை;

எழுத்தாளர்கள் இதற்காக நாண வேண்டியதில்லை
வாசகர்களை குறை சொல்ல தேவையுமில்லை;

எழுத்தாளர்களும், வாசகர்களும்
அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்;

இலக்கிய வட்டத்தில் இருவரும்
தோழமையும் நட்புமாக வளம்பெற வேண்டும்!

 

-டாக்டர்.வ.க.கன்னியப்பன்

Tags:
  • டாக்டர்.வ.க.கன்னியப்பன்
Add new comment
 
கேட்டதும் கிடைத்ததும் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
வையவன் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 16 மே 2012 00:00


நீ கவிதையைக் கேட்டாய்
நான் காதலைக் கேட்டேன்
நீ உள்ளத்தைக் கேட்டாய்
நான் உதடுகளைக் கேட்டேன்
நீ பகல்களைக் கேட்டாய்
நான் இரவுகளைக் கேட்டேன்
நீ உணர்வுகளைக் கேட்டாய்
நான் உறுப்புகளைக் கேட்டேன்
நீ வாழ்க்கையைக் கேட்டாய்
நான் படுக்கையைக் கேட்டேன்
உதவாக்கரை என்றாய்
உதவிக் கொண்டோம் ஒருவருக்கொருவர்
பகிர்ந்து கொண்டோம் பாதிப் பாதி
மீதியிருப்பது நீயும் நானும்
கேட்க மறந்து பேதமிழந்து

-வையவன்

Tags:
  • வையவன்
Add new comment
 
கோபுர விளக்கு அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
சுதாகர் ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 14 மே 2012 00:00

 

சூரியன் மங்கிவிட்டது
நிலவு உதித்துவிட்டது
இருளில் முழ்கிவிட்டது பூமி
"மின்சார தட்டுப்பாடு"

குளிர் காற்று என்னை கடந்துசெல்ல
தூங்கிக் கொண்டு
இருந்த
என்னை தட்டி எழுப்பியது
சாறல் காற்று....

என்னருகே மழைநீர்
சொட்டிக் கொண்டு
இருந்தது!
என்னை சுற்றி எங்கும்
இருட்டு
எட்டிப் பார்த்தேன்
ஊருக்கு மத்தியில் உச்சி கோபுரத்தில்
ஒரு மின்விளக்கு
எரிந்துகொண்டு இருந்தது...

ஒத்தையா நின்னு ஊருக்கே
வழி காட்டியது...
".......ஊருக்கே பெரியமனுசன் நான் தான்"
"........நான் இருக்கிறேன் நீங்கள் செல்லுங்கள்"
"........நானே கடவுள் நானே முதல்வன்"
"........ஒத்த விளக்கு ஒன்னு கோபுரத்தில்
இருக்கு எல்லோரும் பாத்துக்குங்கோ"
என்று சொன்னதோ!
அது கோபுரத்திற்கும் அதில்
வாழும் சிற்பங்களுக்கும்
உண்டான ரகசியம்.................

 

-சுதாகர்

Tags:
  • சுதாகர்
Comments (1)
 
இறைவனின் இணைப்பு ! அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
காயத்ரி பாலாஜி ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 12 மே 2012 00:00

 

அம்மா...
உன் அரவணைப்பு.....
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் அருகாமை...
என் சுவர்க்கம் !


நான்..
உருவாய் வளர...
உன் உடல் தந்தாய்..
உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..
என் உலகமாய்..
நீயாகினாய்...
நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!

மொழி அறியா..நான்..
உன் பேச்சில்....
மயங்குகிறேன்...
உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !

உனக்கும் எனக்கும்..
உறவையும்...
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !
இது..
தாய்.. சேய் என்னும்...
இறைவனின் இணைப்பு !

 

-காயத்ரி பாலாஜி

Tags:
  • காயத்ரி பாலாஜி
Add new comment
 
காலை அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 11 மே 2012 00:00

 

ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!

 

-பாவேந்தர் பாரதிதாசன்

Tags:
  • பாவேந்தர் பாரதிதாசன்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • அவள் ரசித்த கவிதை
  • நவயுக தேவிகள்
  • புதிய மனிதன் காத்திருக்கிறான்
  • அர‌ங்கேற்ற‌ம்
  • சட்டம்...
« தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 109

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.