தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

பார்வையற்றவர்கள்.. உலக மொழிகளின்

இரா.இரவி

மூலம் தமிழ்மொழி!
01.!
பார்வையற்றவர்கள்!
----------------------!
புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்!
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்!
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு!
சாரனை வாழ்க்கை உங்களுக்கு!
சராசரி மனிதர்கள் நாங்கள்!
சரித்திர மனிதர்கள் நீங்கள்!
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு!
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு!
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்!
கோடியில் ஒருவர் நீங்கள்!
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்!
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்!
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்!
இருட்டே வாழ்க்கை என்ற போதும்!
ஒளி ஏற்றுபவர் நீங்கள்!
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள!
எங்களுக்கு!
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்!
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்!
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்!
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு!
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.!
!
02.!
உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி!
------------------------------------------- !
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி!
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி!
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி!
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி!
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி!
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி!
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி!
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி!
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி!
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி!
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி!
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி!
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி!
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி!
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி!
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி!
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி!
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி!
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி!
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி!
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி!
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி!
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி!
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி!
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி!
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி!
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி!
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி!
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி!
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி!
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி!
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி!
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி!
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி!
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி!
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி!
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி!
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி!
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி!
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி!
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி!
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி

சமீபத்திய கவிதை

இலக்கிய வட்டத்தில் இருவரும்

டாக்டர்.வ.க.கன்னியப்பன்

 
ஒருவரின் குரல் போல
மற்றவர்க்கு அமைவதில்லை;

ஒரு இசைக் கருவிபோல்
பிறிதொரு கருவி இசைப்பதில்லை;

ஒருவரின் குணம் போல்
இன்னொருவர் இருப்பதில்லை;

ஒரு எழுத்தாளர் போல்
மற்றொருவர் சிந்திப்பதில்லை;

சிந்தனையையும் ஒருவர் போல்
இன்னொருவர் வெளிப்படுத்துவதில்லை;

எழுத்தாளர்கள் கருத்துக்களுடன்
வாசகர்கள் கருத்துக்கள் ஒன்றாய் இருப்பதில்லை;

எழுத்தாளர்கள் இதற்காக நாண வேண்டியதில்லை
வாசகர்களை குறை சொல்ல தேவையுமில்லை;

எழுத்தாளர்களும், வாசகர்களும்
அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்;

இலக்கிய வட்டத்தில் இருவரும்
தோழமையும் நட்புமாக வளம்பெற வேண்டும்!
 

குறிப்பில்லாக் கவிதை (random)

கட்டில் சிலந்தி

வல்வை சுஜேன்

கட்டில் சிலந்தி ஒன்று !
ஈமெயில் கொடுத்தது!
மெல்லத் திறந்தேன்!
செவ்வான ஒளி நின்று !
மெத்தை வலை விரித்து !
விழி மெளசால்!
சிருங்கார அழைப்பு விடுகிறாள் ஆளுக்கொரு பணத் தாலி கட்டி!
இவள் மேனியை புற்றெடுக்கும் !
காமக் கறையான்களால்!
உயிரணுக்கள் இவளுக்குள்ளே !
செம்புத் தண்ணீர் ரோடு !
பஞ்சாயத்து பண்ணி!
உயிர் கொல்லி எய்ட்ச்சை!
நாத்து மேட்டில் விதைத்து!
நீர் தெளித்து !
மெளனித்து காத்திருக்கிறது !
இவளின் நாளைய மணவாளன்!
எய்ட்ச் எனும் கொடிய நாயகனே!
மரண மாலையோடு!
விரகதாப விசை புயலாய் !
மலர் மஞ்சத்தில் காத்திருக்கிறான் !
அந்த மரண தேவன் !
முந்தானை வைப்பகத்தில் !
இவள் நோட்டுக் கட்டுகளை !
எண்ண எண்ண!
இவளின் ஆயுள் காலங்கள் !
கழிக்கப்படுகின்றன!
விட்டில்களே வீழ்ந்து விடாதீர் !
மெத்தை வலையில் விசச் சிலந்தி